கன்மலை கிறிஸ்துவ சபை மார்ச் 2018 வாக்குத்தத்தம்
Message: Brother Micheal
1.03.2018
ஏசாயா 60:20
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்
நீங்கள் துன்பத்தை கண்ட வருஷத்துக்கு நிகராக கர்த்தர் உங்களை மகிழ்ச்சியாய் வைப்பார். உங்கள் துக்க நாட்கள் முடிந்து போகும். இந்த மாதம் முழுவதும் கர்த்தரே உங்களுக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். நீங்கள் இருளை காண்பது இல்லை, பொல்லாப்பை காண்பது இல்லை, வாதை உங்கள் வீட்டை அனுகவே அனுகாது கர்த்தர் உங்களுக்கு வெளிச்சமாய் இருந்து பிசாசுகளை துரத்தி, உன் சத்துருக்களை நிர்மூலமாக்கி உன் எல்லா விதமான காரியங்களுக்கும் கர்த்தரே வழிகாட்டியாய் இருந்து உங்களை நடத்துவார்.
கர்த்தரே நித்திய வெளிச்சமாயிருப்பார்
1. உன்னை குணமாக்கும்படியாய்
ஏசாயா 30:26
கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்.
கர்த்தர் இந்த மாதத்தில் உங்களுக்கு ஏழு மடங்கு சூரியனின் வெளிச்சத்தை போல உங்களை நடத்துவார். எதற்காக என்றால் உன்னுடைய அடிகாயங்களை ஆற்றுவதற்காக அது மனதின் அகத்தே உள்ளே காயமாக இருந்தாலும் சரி வெளியே உள்ள காயமாக இருந்தாலும் சரி கர்த்தர் சொல்லுகிறார் உன்னை குணமாக்கும் படியாய் கர்த்தரே வெளிச்சமாய் இருக்கிறார்.
ஏசாயா 58:8
அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.
ஆண்டவர் மிக அழகாய் இந்த வசனத்தை நமக்காக எழுதி வைத்து இருக்கிறார் உன் சுக வாழ்வு சீக்கிரமாய் துளிர்க்கும், ஒரு வேலை நீங்கள் பெலவீனமாய் இருக்கலாம் அல்லது வாழ்க்கையிலே அடுத்த கட்டத்துக்கு போக முடியாமல் இருக்கலாம் கர்த்தர் இன்றைக்கு சொல்லுகிறதாவது உங்களுடைய சுக வாழ்வை அவர் சீக்கிரமாய் துளிர செய்வார்.
2. உன்னை வழிநடத்தும்படியாய்
யாத்திராகமம் 13:21
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.
யாத்திராகமம் 13:22
பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.
கர்த்தர் இந்த மாதத்தில் உங்களுக்கு பகலிலே மேகஸ்தம்பம் ஆகவும் இரவில் அக்கினி ஸ்தம்பம் ஆகவும் இருந்து உங்களை விட்டு விலகாமல் வழிநடத்துவார்.
3. உன்னை நீதியாய் வாழவைக்கும்படியாய்
மீகா 7:8
என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.
மீகா 7:9
நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.
FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment