கன்மலை கிறிஸ்துவ சபை
தேவசெய்தி : Brother Micheal
Date : 6.05.2018
II இராஜாக்கள் 5:19
அதற்கு அவன்: சமாதானத்தோடேபோ என்றான்
கர்த்தர் உங்களுக்கு சொல்லுகிறதான ஒரு காரியம் சமாதானத்தோடே போ என்பதாகும். நீங்கள் எந்த விதமான காரியங்களில் கலங்கி கொண்டு இருந்தாலும் சரி கர்த்தர் இன்றைக்கு சொல்லுகிற வார்த்தையானது சமாதானத்தோடே போ என்பதாகும். இந்த சமாதானம் உலகம் தருகிற சமாதானம் அல்ல கர்த்தர் தருகிற சமாதானம் இது என்றைக்கும் நிலைத்திருக்கும். கர்த்தர் எப்படிப்பட்ட சமாதானத்தை தருகிறார் என்பதை மூன்று விதமான காரியங்களில் நாம் தியானிப்போம்.
1. சமாதானத்தோடேபோ - உன் விண்ணப்பம் நிறைவேறும்
I சாமுவேல் 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
உங்களுடைய விண்ணப்பம் எதுவாக இருந்தாலும் சரி அதனை இன்றைக்கு வாய்க்கும் படி நம் தேவன் கட்டளையிடுகிறார். நீங்கள் எவற்றிற்கெல்லாம் இருதயத்தை ஊற்றி பாரத்தோடு ஜெபித்தீர்களோ,அவை எல்லாவற்றையும் கர்த்தர் வாய்க்கும் படி செய்யப்போகிறார். நீங்கள் இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உங்கள் விண்ணப்பத்தின்படி அவர் உங்களுக்கு கட்டளையிடுவார்.
ஆகையால் இந்த மே மாதத்தில் முதலாம் வாரத்தில் கர்த்தர் சொல்லுகிறார் நீ சமாதானத்தோடே போ அன்னாளை போல பாரம் உடையவராக நீ இருக்கிறாயோ தேவன் சொல்லுகிறார் நீ பயப்படவேண்டாம் நம்மை நினைவு கூறுகிற ஒரு ஆண்டவர் ஒருவர் இருக்கிறார், அவர் உறங்குவதும் இல்லை, தூங்குவதும் இல்லை, நம்மை கரிசனையாய் விசாரிக்கிறவர் ஒருவர் உண்டு அவர் நமக்கு சமாதானத்தை தந்து நன்மையாய் நடத்துவார்.
I சாமுவேல் 1:12
அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
I சாமுவேல் 1:13
அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,
வசனம் சொல்கிறது ஏலியோ அன்னாளை கவனித்து கொண்டு இருந்தார். அது போலவே கர்த்தர் உங்களையும் கவனித்து கொண்டு இருக்கிறார். அவர் நிச்சயம் உங்கள் விண்ணப்பத்திற்கு பதில் அளிப்பார்.
வசனம் சொல்கிறது அன்னாள் தன் இருதயத்திற்குள் விண்ணப்பம் பண்ணினாள். கர்த்தருக்கு தெரியும் அந்த விண்ணப்பம் இன்னதென்று எனவேதான் ஆண்டவர் ஏலி வாயிலாக அவளிடம் பேசுகிறார். நம்முடைய இருதயத்தின் விண்ணப்பத்தையும் நம் தேவனாகிய கர்த்தர் அறிந்து இருக்கிறார் அவர் அதை உங்களுக்கு கட்டளையிடுவாராக.
2. சமாதானத்தோடேபோ - உன் வேதனை நீங்கும்
மாற்கு 5:34
அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.
முதலாவது காரியத்தில் ஆண்டவர் ஆசாரியரான ஏலி மூலமாக பேசினார். இங்கோ நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே சொல்கிறார், இன்று முதல் உங்கள் வேதனை நீங்கும். உன்னுடைய எல்லாவிதமான வேதனைகளையும் நான் நீக்குவேன் என்று நீ சமாதானத்தோடே போ என்று கர்த்தர் சொல்லுகிறார். உன் வேதனை நீங்கி சுகமாய் இருப்பாய் உன் விசுவாசம் உன்னை இரட்சிக்கும்.
மாற்கு 5:27
இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி
மாற்கு 5:28
ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.
மாற்கு 5:29
உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.
அந்த பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவின் வஸ்திரத்தை தொட்ட அந்த கனமே அவள் சுகம் ஆனதை தன் சரீரத்தில் உணர்ந்தாள். இதை அறிந்த இயேசு அவளை தேடினார்.
மாற்கு 5:30
உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.
மாற்கு 5:31
அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.
மாற்கு 5:32
இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.
மாற்கு 5:33
தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள்.
அந்த ஸ்திரீ நன்மை பெற்று கொண்ட பிறகும் ஏன் இயேசு தேடுகிறார் என்று சொன்னால், இதில் இருந்து இரண்டு காரியங்களை தேவன் நமக்கு வெளிப்படுத்துகிறார். முதலாவது சுகம் பெற்ற அந்த ஸ்திரீயை பரிபூரண ஆசீர்வாதம் கொடுக்க தேடுகிறார். இரண்டாவது காரியம் அந்த ஸ்திரீ பயந்து நடுங்கினாள் பின் தனக்கு நடந்தவற்றையெல்லாம் இயேசுவிடம் கூறினாள். அது போல தான் நாம் ஆண்டவரிடம் சபையில் தேவன் நமக்கு அற்புதம் அளிக்கும் பொழுது அந்த நன்மையை சொல்லாமல் இருக்க கூடாது தேவன் சமூகத்தில் பயத்தோடு நீங்கள் பெற்று கொண்ட அற்புதங்களை சாட்சியாக அறிவிக்க வேண்டும். தேவன் இதை செய்தார் என்று சொல்ல வேண்டும் அப்பொழுது ஆண்டவர் உங்களை பூரண சமாதானத்தை அளித்து உங்களை ஆசீர்வதிப்பார்.
3. சமாதானத்தோடேபோ - நீ ஆசீர்வதிக்கப்படுவாய்
I சாமுவேல் 25:32
அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
I சாமுவேல் 25:33
நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.
I சாமுவேல் 25:34
நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியுமட்டும் நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
I சாமுவேல் 25:35
அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கி கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.
கர்த்தர் மற்றவர்களுக்காக உன்னை தண்டிக்க மாட்டார் அவர் மிகவும் அன்பானவர், கர்த்தர் உங்கள் முகத்தை பார்த்துதான் இன்னமும் ஆசீர்வதிக்கிறார். யார் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நீ நீதியாய் இருந்தால் அவர் உன்னை கொண்டு ஆசீர்வதிப்பார், உன்னை கொண்டு உன் குடும்பத்தை வர்த்தக பண்ணுவார், உன்னை கொண்டு அவர் போஷிப்பார், உன்னை கொண்டு நீதியின் காரியத்தை வாய்க்க பண்ணுவார், உன்னை கொண்டு அவர் கிருபையை இருப்பார், அபிகாயிலே நீ எனக்கு முன்பாக உத்தமமாக இருந்தபடியால் இந்த காரியத்தை எனக்கு முன்பாக செய்யாதபடிக்கு தடை பண்ணியதால் நான் உன் சொல்லை கேட்டு, உன் முகத்தை பார்த்து உன்னை ஆசிர்வதிப்பேன் இது தாவீது அபிகாயிலுக்கு சொல்லிய வார்த்தை இன்று கர்த்தர் உங்களுக்கு சொல்கிறார் நீ சமாதானத்தோடே வீட்டுக்கு போ இந்த மே முதல் வாரத்தில் கர்த்தர் சொல்லுகிறார் நீ சமாதானத்தோடே வீட்டுக்கு போ, கர்த்தர் உன்னோடு கூட இருக்கிறார், உன் முகத்தை அவர் பார்க்கிறார், அவர் உன்னை ஆசீர்வதிப்பார்.
FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment