கன்மலை கிறிஸ்துவ சபை மே 2018 வாக்குத்தத்தம்
Word of God: Brother Micheal
1.05.2018
சங்கீதம் 27:13
நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.
ஏன் அவர் நன்மை செய்ய வேண்டும் ? யாருக்கு அவர் நன்மை செய்ய போகிறார் ?
1. தம்மை தேடுபவர்களுக்கு அவர் நன்மை செய்வார்
சங்கீதம் 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் இந்த மே மாதத்தில் குறைவுபடாது. நாம் அவரை தேட தேட கர்த்தர் அவருடைய நன்மையான கரங்களிலே நீங்கள் திருப்தி ஆவதை காண்பீர்கள். இந்த மே மாதத்தில் கர்த்தருடைய நன்மையை காண்பீர்கள்.
எஸ்றா 8:22
வழியிலே சத்துருவை விலக்கி, எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடையகரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்.
தானியேல் 6:10
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
2. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் நன்மை செய்வார்
சங்கீதம் 84:11
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு கர்த்தர் நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார். ஏனென்றால் நீங்கள் உத்தமத்திலே நிலைத்திருப்பதை கர்த்தர் காண்கிறார். கர்த்தர் உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு சூரியனும், கேடகமுமாய் இருந்து கிருபையும், மகிமையுமாய் இருப்பார். அதை இந்த மாதத்திலே காண்பீர்கள். யோபுவை அப்படித்தான் வர்ணித்து கர்த்தர் சொல்லுகிறார்.
யோபு 2:3
அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார்.
யோபு 2:9
அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும் என்றாள்.
யோபு 31:6
சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.
கர்த்தர் நீதியாய் நம் உத்தமதை அவருடைய நியாய தராசில் நிறுத்தி இந்த மாதத்திலே நன்மை செய்வார்
3. பசியுள்ள ஆத்துமாவை அவர் நன்மையினால் நிரம்பிட செய்வார்
சங்கீதம் 107:8
தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
சங்கீதம் 107:9
அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
I சாமுவேல் 2:5
திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள்.
FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment