Thursday, April 26, 2018

ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்


கன்மலை கிறிஸ்துவ சபை

தேவசெய்தி : Brother Micheal

Date : 22.04.2018


அப்போஸ்தலர் 1:14
அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.

அப்போஸ்தலர் 1:15
அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று:

1.விசுவாசிகளுக்குள்ளே காணப்படுகிற  ஒருமனம்

அப்போஸ்தலர் 2:1
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.

அப்போஸ்தலர் 2:2
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

நாம் ஒரு மனப்பட்டு காத்து இருக்கிறதாலே எந்த சூழ்நிலையிலும் ஆண்டவர் நம்மை அபிஷேகித்து பெலப்படுத்த அவர் வல்லவராய் இருக்கிறார்.

2. குடும்பத்தாருக்குள்ளே காணப்படுகிற ஒருமனம் 

மத்தேயு 18:18
பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 18:19
அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

குடும்ப ஜெபம் இல்லாத வீடு கூரை இல்லாத வீடு, வசனம் தெளிவாய் சொல்கிறது நீங்கள் பூமியில் எதை கட்டுகிறீர்களோ அது பரலோகத்தில் கட்டப்படும். எதை கட்டவிழ்கிறீர்களோ அது பரலோகத்தில் கட்டவிழ்க்க படும். நீங்கள் குடும்பமாய் ஒருமனப்பட்டு ஜெபத்தில் எதை கேட்கிறீர்களோ அதை பிதாவிடத்தில் இருந்து நிச்சயமாய் பெற்று கொள்வீர்கள். முக்கியமாக கணவன், மனைவி குடும்பத்தில் ஒருமனப்பட்டு கைகோர்த்து ஜெபிக்கும் பொழுது உங்கள் வீடு குட்டி பரலோகமாய் மாறும் சாத்தானின் கிரியைகள் அழிக்கப்படும். நீங்கள் எதிர்பார்த்த ஆசீர்வாதம் விரைவாக கிடைக்கும். இதற்கு தேவை எல்லாம் ஒன்றே குடும்பத்தில் யாராவது இரண்டு பேர் ஒருமனப்பட்டால் நீங்கள் கேட்கிற நன்மைகளை ஜோதிகளின் பிதாவிடத்தில் இருந்து பெற்றுக்கொள்வீர்கள். 

3. தனி நபருக்குள்ளே காணப்படுகிற ஒருமனம் 

ரோமர் 15:3
கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.

ரோமர் 15:4
தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.

ரோமர் 15:5
நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு,

ரோமர் 15:6
பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.

நாம் இயேசு கிறிஸ்துவை போல ஏக சிந்தை உடையவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுது ஆவியானவருடைய குரலை நீங்கள் கேட்பீர்கள். இயேசு கிறிஸ்துவின் மாதிரியின் படியே நாம் கடைபிடிப்போம் என்று சொன்னால் ஏக சிந்தை நம்மில் வெளிப்படும். 




FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment