கன்மலை கிறிஸ்துவ சபை
தேவசெய்தி : Brother Micheal
Date : 03.06.2018
பிலிப்பியர் 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
இங்கே வசனத்தில் படி நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல் விண்ணப்பங்கள் எதுவாக இருந்தாலும் அதனைஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அவ்வாறு தன் வேண்டுதலை தெரியப்படுத்தின தாசர்களை குறித்து நாம் காண்போம்.
1. ஆபிரகாமை போல உங்கள் ஜெபம் இருப்பதாக
ஆதியாகமம் 18:20
பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்,
ஆதியாகமம் 18:21
நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார்.
ஆதியாகமம் 18:22
அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம்விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்.
ஆதியாகமம் 18:23
அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?
ஆதியாகமம் 18:24
பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?
ஆதியாகமம் 18:25
துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.
ஆதியாகமம் 18:26
அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்.
ஆதியாகமம் 18:27
அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.
ஆதியாகமம் 18:28
ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
ஆதியாகமம் 18:29
அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
ஆதியாகமம் 18:30
அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
ஆதியாகமம் 18:31
அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
ஆதியாகமம் 18:32
அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
ஆதியாகமம் 18:33
கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.
கர்த்தர் சோதோம் கொமோராவை அழிப்பேன் என்று சொல்லும் பொழுது ஆபிரகாம் உடனே சமீபமாய் கர்த்தருடைய சமூகத்திற்கு சென்று லோத்தை காப்பாற்றும் படியாக தன்னுடைய விண்ணப்பத்தை தேவனுக்கு தெரியப்படுத்துகிறார். ஆபிரகாம் லோத்தின் பெயரை குறிப்பிடாமல் இன்னது இன்னது என் தேவனிடத்தில் கருத்தாய் பேசி லோத்தின் குடும்பத்தை காப்பாற்றி விட்டார்.
அது போல நாமும் கர்த்தரிடத்தில் ஜெபிக்க வேண்டும். நாளுக்கு நாள் சோதோம் கொமோராவை காட்டிலும் அதிகமான பாவச்செயல்கள் தேசங்களில் எழும்பிவிட்டன. எனவே நாம் நம் தேசத்தின் இரட்சிப்புக்காக, தேசத்தின் மனம் திரும்புதலுக்காக கர்த்தருடைய சமூகத்தில் நின்று மன்றாட வேண்டும். ஆபிரகாமை போல உங்கள் ஜெபம் இருப்பதாக.
2. சாமுவேலை போல உங்கள் ஜெபம் இருப்பதாக
I சாமுவேல் 7:4
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைசெய்தார்கள்.
I சாமுவேல் 7:5
பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான்.
I சாமுவேல் 7:6
அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றைய தினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.
இங்கே இஸ்ரவேல் ஜனங்கள் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைசெய்தார்கள். சாமுவேல் தீர்க்கதரிசி இஸ்ரவேலரை நோக்கி நான் உங்களுக்காக தேவனிடத்தில் மன்றாடும் படிக்கு இஸ்ரவேலர் எல்லோரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றார். ஏனென்றால் அவர்கள் சுத்திகரிக்கப்படவேண்டும். மிஸ்பா என்றால் சுத்திகரிக்கப்படுகிற இடம். இன்றைக்கு நமக்கோ அது தேவனுடைய ஆலயமாக இருக்கிறது, நீங்கள் ஆலயத்திற்குள் செல்லும் பொழுதே பரிசுத்தமாக்கப்படுகிறீர்கள்.
I சாமுவேல் 7:7
இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு,
I சாமுவேல் 7:8
சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.
I சாமுவேல் 7:9
அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச் செய்தார்.
பெலிஸ்தர் என்றாலே அது இன்றைக்கு நமக்கு விரோதமாக எழும்புகிற சத்துருக்கள் தான். நீ மிஸ்பாவுக்கு போகிறாய் என்று தெரிந்தாலே சாத்தானின் ராஜ்ஜியம் கலங்கிவிடும். இஸ்ரவேல் ஜனங்கள் மிஸ்பாவிலே சாமுவேலை நோக்கி பெலிஸ்தரிடம் இருந்து தங்களை இரட்சிக்கும் படி எங்களுக்காக கர்த்தரிடத்தில் ஓயாமல் வேண்டி கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.
பெலிஸ்தர் போன்ற காரியங்கள் உன் வாழ்க்கையில் அனுதினமும் உன்னை எதிர்த்து நிற்கிறதா, நீங்கள் மிஸ்பாவிலே கால் வாய்த்த படியினால் கர்த்தர் இன்றைக்கு உன் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி உன்னை விடுவிப்பார். பெலிஸ்தரை முறியடிக்க இன்றைக்கு நமக்கு கர்த்தரே தீர்க்கதரிசியாய் இருக்கிறபடியினாலே, கர்த்தரே பரிசுத்த ஆவியானவராய் இருக்கிறபடியினாலே அவர் உங்களுக்காக பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து ஓயாமல் உங்களுக்காக விண்ணப்பம் பண்ணுகிற படியினாலே நீங்கள் மடங்கடிக்க படுவதில்லை உங்களை பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சித்து வாழவைக்க தேவன் வல்லவராய் இருக்கிறார். உங்களுடைய ஜெபம் சாமுவேல் போல் இருப்பதாக.
3. எஸ்தரை போல உங்கள் ஜெபம் இருப்பதாக
எஸ்தர் 4:1
நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு,
எஸ்தர் 4:2
ராஜாவின் அரமனை வாசல் முகப்புமட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.
எஸ்தர் 4:3
ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள்.
எஸ்தர் 4:4
அப்பொழுது எஸ்தரின் தாதிமார்களும், அவளுடைய பிரதானிகளும்போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராஜாத்தி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்திருந்த இரட்டை எடுத்துப்போட்டு, அவனை உடுத்துவிக்கிறதற்கு வஸ்திரங்களை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாதிருந்தான்.
எஸ்தர் 4:5
அப்பொழுது எஸ்தர் தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைப்பித்து: காரியம் என்ன? அதின் முகாந்தரம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடத்தில் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள்.
எஸ்தர் 4:6
அப்படியே ஆத்தாகு ராஜாவின் அரமனை வாசலுக்கு முன்னான பட்டணவீதியிலிருக்கிற மொர்தெகாயினிடத்தில் புறப்பட்டுப்போனான்.
எஸ்தர் 4:7
அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக்கொடுப்பேன் என்று சொன்ன பணத்தொகையைப்பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அன்றி,
எஸ்தர் 4:8
யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடத்தில் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் அகத்தியமாய் ராஜாவினிடத்திற் போய், அவனிடத்தில் தன் ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச் சொன்னான்.
மொர்தெகாய் யூதர்களை காப்பாற்றும் படி ராஜாவினடத்தில் விண்ணப்பம் பண்ணவும், மன்றாடவும் வேண்டும் என்று இதை எஸ்தருக்கு தெரியப்படுத்துங்கள் என்று ஆத்தாகுவிடத்தில் கேட்டு கொண்டார்.
எஸ்தர் 5:1
மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான்.
எஸ்தர் 5:2
ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.
எஸ்தர் 5:3
ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்னவேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.
எஸ்தர் 5:4
அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமானால், நான் தமக்குச் செய்வித்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்றாள்.
எஸ்தர் 5:8
ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபைகிடைத்து, என் வேண்டுதலைக் கட்டளையிடவும், என் விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் என் விண்ணப்பமுமாயிருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.
எஸ்தர் 5:9
அன்றைய தினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெகாய் தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரம் நிறைந்தவனானான்.
எஸ்தர் 5:12
பின்னையும் ஆமான்: ராஜஸ்திரீயாகிய எஸ்தரும் தான் செய்த விருந்துக்கு ராஜாவுடனேகூட என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடனேகூட நான் விருந்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன்.
எஸ்தர் 5:14
அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப்போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.
எஸ்தர் 6:1
அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.
எஸ்தர் 6:2
அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.
எஸ்தர் 6:3
அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.
எஸ்தர் 6:4
ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவினிடத்தில் பேசும்படி ராஜ அரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.
எஸ்தர் 6:6
ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன் மனதிலே நினைத்து,
எஸ்தர் 6:8
ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்.
எஸ்தர் 6:9
அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.
எஸ்தர் 6:10
அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.
எஸ்தர் 6:11
அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.
எஸ்தர் 6:12
பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பிவந்தான்; ஆமானோவென்றால் சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப் போனான்
யார் மொர்தெகாய், யூதராகிய நாம் தான் மொர்தெகாய் சாத்தான் நம்மை அழிக்க என்ன வேண்டுமானாலும் செய்வான் அவன் நம்மை விழப்பண்ண தான் கெர்ச்சிக்கிற சிங்கம் போல வகை தேடி சுற்றி திரிகிறான். எனவே நாம் இதற்கெல்லாம் அசரவே கூடாது ஏனென்றால் நாம் துதிக்கிறவர்கள் அவன் திட்டங்களை நாம் நம் துதியினால் உடைத்து எறியலாம். உன் சத்துரு என்றைக்கு மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளானோ அன்றைக்கு அவன் ஆமானைப்போல அழியப்போகிறான் என்பது தான் உண்மை.
சில நேரங்களில் நம் சத்துருக்களையே நமக்கு சாதகமாக கர்த்தர் மாற்றுவார். சில நேரங்களில் நம் சத்துருக்கள் மூலமாகவே தேவன் நமக்கு உயர்வை வரப்பண்ணுவார். எஸ்தரைபோல இன்னது என்று அறிந்து கொண்டு குறிப்பாக ஞானமாய் ராஜாவினடத்தில் தயை பெற்று கொண்டது போல நாமும் நம்முடைய ராஜாதி ராஜாவுக்கு முன்பாக எஸ்தரைபோல ஞானமாய் விண்ணப்பம் செய்து அவரிடம் இருந்து தயை பெற்றுக்கொள்ளக்கடவோம்.
FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment