கன்மலை கிறிஸ்துவ சபை
தேவசெய்தி : Brother Kamal
Date : 10.06.2018
" நான் உன்னோடு இருப்பேன் "
ஏசாயா 43:2
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
1. நீங்கள் தண்ணீரை கடந்து போவீர்கள்
ஏசாயா 43:2
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்;
யாத்திராகமம் 41:21
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
யாத்திராகமம் 41:22
இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
யாத்திராகமம் 41:27
அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.
யாத்திராகமம் 41:28
ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.
யாத்திராகமம் 41:29
கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.
நீங்கள் தண்ணீரை கடக்கும் போது ஆண்டவர் உங்களோடு இருக்க வேண்டும் என்றால் உங்களுக்குள் விசுவாசம் இருக்க வேண்டும். அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை விசுவாசித்தார்கள் அதனால் தான் அவர்கள் தண்ணீரை கடக்க முடிந்தது. கிறிஸ்துவ வாழ்க்கை என்பது தண்ணீரை போல தான். ஒவ்வொரு நாளும் நாம் தண்ணீரை கடக்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் தண்ணீரை கர்த்தர் உங்களுக்கு மதிலாய் வைத்து இருக்கிறார். சேர வேண்டிய நேரத்தில் தேவன் சரியாய் வழிநடத்துவார். உங்களுக்குள் விசுவாசம் இருக்கும் என்று சொன்னால் கடல் போல பொங்கி வரும் எல்லா பிரச்சினைகளையும் தாண்டி நீங்கள் கடந்து போவீர்கள் கர்த்தர் உங்களோடு மதிலாய் இருந்து காப்பார்.
2. ஆறுகள் உன் மேல் புரளுவது இல்லை
ஏசாயா 43:2
நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை;
யோசுவா 3:5
யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.
யோசுவா 3:15
யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே,
யோசுவா 3:16
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்.
யோசுவா 3:17
சகல ஜனங்களும் யோர்தானைக்கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து போனார்கள்.
நீங்கள் பரிசுத்தமாய் ஜீவிக்க, ஜீவிக்க உங்கள் மேல் ஒருவரும் கை வைக்க முடியாது ஆசாரியரின் கால்கள் யோர்தானில் பட்ட மாத்திரத்தில் கரை புரண்டு ஓடும் யோர்தான் குவியலாய் நின்றது. அதை போல தான் நீங்கள் போகும் இடமெல்லாம் ஸ்தம்பித்து போகத்தக்கதாய் கர்த்தர் செய்வார். உன் சத்துருக்கள் பின்னிட்டு திரும்புவார்கள், அதற்கு உங்களுக்கு தேவை பரிசுத்தம். ஆறுகள் உன்மேல் புரளாமல் இருக்க வேண்டும் என்றால் உங்களுக்குள் பரிசுத்தம் இருக்க வேண்டும்.
3. அக்கினி உங்களை சேதப்படுத்தாது
ஏசாயா 43:2
நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
தானியேல் 1:3
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரை கொண்டுவரவும்,
தானியேல் 1:7
பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.
தானியேல் 3:5
எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.
தானியேல் 3:6
எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.
தானியேல் 3:17
நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
தானியேல் 3:19
அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து,
தானியேல் 3:20
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலேபோடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்.
தானியேல் 3:24
அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.
தானியேல் 3:25
அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின்சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
தானியேல் 3:27
தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.
தானியேல் 3:28
அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.
தேவன் உங்களோடு இருக்க வேண்டும் என்றால் நீங்கள் மாசற்றவர்களாக இருக்க வேண்டும். தண்ணீர்களை நீங்கள் கடப்பீர்கள், ஆறுகள் உங்கள் மேல் புரளுவது இல்லை, அக்கினி ஜுவாலை உங்கள் மேலும், உங்கள் பேரிலும் பற்றாது இருக்கும். கர்த்தர் எல்லாவிதமான சோதனைகளில் இருந்தும், எல்லாவிதமான பிரச்சினைகளில் இருந்தும் உங்களை காப்பாற்றுவார். ஒரு தீர்வு கிடைக்கும்படி செய்வார்.
நமக்கு ஒரு கோல் உண்டு, தாவீதின் கோல் உண்டு அவர் வந்து அந்த கோலை நீட்டினார் என்றால் எல்லா கடல் அலைகள் போல் எழும்பி நிற்கிற எல்லா தடைகளும் விலகி உங்களுக்கு மதிலாய் நிற்கும். நீங்கள் அதினுடாய் கடந்து போவீர்கள். நமக்கு ஒரு ஆசாரியன் உண்டு அவரே இயேசு கிறிஸ்து அவர் வந்து நம் வாழ்க்கையின் உள்ள கரை புரண்டு ஓடும் ஆறுகள் போல் உள்ள பிரச்சினைகளில் கால் வைக்கும் பொழுது அவை யாவும் உங்களை விட்டு நீங்கும். நமக்கு ஒரு தேவன் உண்டு, அவர் அக்கினியின் தேவன், நம்மோடு கூட உலாவி வருகிற அக்கினியானவர், அவர் நம்மோடு கூட நடந்து வருவார், பிரச்சினைகள் அக்கினியை போல கொழுந்து விட்டு எரிந்தாலும் அவர் நம்மோடு இருப்பதால் நீங்கள் சேதம் அடைவதில்லை. அவர் உங்களுக்கு விடுதலையை கொடுப்பார். ஆமென்.
FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment