கன்மலை கிறிஸ்துவ சபை
தேவசெய்தி : Brother Micheal
Date : 17.06.2018
பிலிப்பியர் 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
இங்கே வசனத்தில் படி நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல் விண்ணப்பங்கள் எதுவாக இருந்தாலும் அதனைஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அவ்வாறு தன் வேண்டுதலை தெரியப்படுத்தின தாசர்களை குறித்து நாம் காண்போம்.
கடந்த வாரத்தில் மூன்று பேரின் ஜெபங்களை குறித்து நாம் தியானித்தோம். இன்றைக்கு மேலும் நான்கு பேரின் ஜெபத்தினை குறித்து இன்றைக்கு காண்போம்.
முதலாவது செய்தியின் லிங்க் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
4. மோசேயை போல உங்கள் ஜெபம் இருப்பதாக
சங்கீதம் 106:21
எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய,
சங்கீதம் 106:22
தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்
.
சங்கீதம் 106:23
ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான்.
மோசே நாற்பது வருடம் பார்வோன் அரண்மனையிலும், நாற்பது வருடம் தன் மாமனார் இடத்திலேயும், நாற்பது வருடம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தில் இருந்து மீட்டு கானானுக்கு வழிநடத்தியும் ஆக 120 வருடம் வாழ்ந்தார்.
பெரிய மகத்துவமான கிரியைகளை செய்து எகிப்தில் இருந்த அடிமை நுகத்தை தகர்த்து எரிந்து தங்களை இரட்சித்த வல்லமையான தேவனை இஸ்ரவேல் ஜனங்கள் மறந்து அவருக்கு அருவருப்பான காரியங்களை செய்தார்கள், இதனால் தேவனுடைய உக்கிர கோபத்திற்கு ஆளானார்கள். அப்பொழுது தான் மோசே கர்த்தருடைய கோபத்தை ஆற்றும் படிக்கு தன் இஸ்ரவேல் ஜனத்தாருக்காக தேவனுக்கு முன்பாக திறப்பின் வாயிலே நின்று அவர்களுக்காக மன்றாடினார்.
மோசே சுயநலம் பாராமல் தன் ஜனத்திற்காக மன்றாடி ஜெபித்தார். இன்றைக்கு நம்முடைய ஜெபமும் அப்படியாய் இருப்பதாக. கர்த்தருடைய உக்கிரத்தை ஆற்றும் படியாய் உம்முடைய ஜெபம் இருப்பதாக, சுயநலமாய் நாம் ஜெபிக்காமல் மோசே ஜெபித்தது போல நம்முடைய ஜெப ஜீவியம் இருப்பதாக.
5. ஆயக்காரரை போல (தாழ்மையான ஜெபம்) உங்கள் ஜெபம் இருப்பதாக
லூக்கா 18:10
இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
லூக்கா 18:11
பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
லூக்கா 18:12
வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
லூக்கா 18:13
ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
லூக்கா 18:14
அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
வசனம் சொல்கிறது இங்கே இரண்டு பேரின் ஜெபங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது, ஒன்று பரிசேயரின் ஜெபம், மற்றொன்று ஆயக்காரரின் ஜெபம். இங்கே பரிசேயர் எப்படி ஜெபிக்கிறார் நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் நான் இல்லை வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று ஜெபிக்கிறார். ஆனால் ஆயக்காரரோ ஆண்டவருடைய சந்நிதிக்கு கூட வருவதற்கு தன்னுடைய கண்களை ஏறெடுத்து பார்க்காத படிக்கு தூரமாய் நின்று தன்னை தாழ்த்தி ஜெபம் பண்ணுகிறார் உங்களுடைய ஜெபம் இந்த ஆயக்காரரை போல் இருப்பதாக, உங்களுடைய ஜெபத்தில் பெருமை இல்லாத படிக்கு தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று தாழ்மையாய் இருப்பதாக
6. யோபுவை போல உங்கள் ஜெபம் இருப்பதாக
யோபு 1:3
அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.
யோபு 1:4
அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம் பண்ணும்படி அழைப்பார்கள்.
யோபு 1:5
விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.
ஒருவேளை என்பது சந்தேகமான ஒன்று, அதுபோல நீங்கள் ஜெபம் செய்யும் பொழுது உங்களை நீங்களே நிதானித்து அறிந்து ஒருவேளை தேவனே நான் பாவம் செய்திருப்பேனே ஆகில் என்னை மன்னியும் என்று யோபு எப்படி தன் பிள்ளைகளுக்காக பாவ நிவாரண பலி செய்து எப்படி வேண்டினாரோ அதுபோல் உங்கள் ஜெபம் இருப்பதாக.
7. இயேசுவைபோல உங்கள் ஜெபம் இருப்பதாக
மத்தேயு 27:28
அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,
மத்தேயு 27:29
முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக்கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,
மத்தேயு 27:30
அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.
மத்தேயு 27:31
அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
மத்தேயு 27:32
போகையில் சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்.
மத்தேயு 27:33
கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது,
மத்தேயு 27:34
கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.
மத்தேயு 27:35
அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
மத்தேயு 27:36
அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.
மத்தேயு 27:37
அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.
மத்தேயு 27:38
அப்பொழுது, அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.
மத்தேயு 27:39
அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:
மத்தேயு 27:40
தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்.
மத்தேயு 27:41
அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி:
மத்தேயு 27:42
மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.
மத்தேயு 27:43
தன்னை தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.
மத்தேயு 27:44
அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்
மத்தேயு 27:45
ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
மத்தேயு 27:46
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மத்தேயு 27:47
அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்
மத்தேயு 27:48
உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
மத்தேயு 27:49
மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.
மத்தேயு 27:50
இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
இவ்வளவு நடந்த பின்னரும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஜெபம் எப்படி இருந்தது என்றால்
லூக்கா 23:34
அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
உங்களுடைய ஜெபம் அப்படியாய் இருப்பதாக, நம் ஆண்டவர் எவ்வளவு நல்லவராய் இருக்கிறார் அவர் அந்த சிலுவையில் பாடு அனுபவிக்கும் பொழுது அவர்களை சபிக்கவில்லை மாறாக இயேசு அவர்களுக்காக பரிதபித்து பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று சொல்லி தன் விண்ணப்பத்தை ஸ்தோத்திரத்தோடே தேவனுக்கு தெரியப்படுத்துகிறார். நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை போல உங்கள் ஜெபம் இருப்பதாக
FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment