கன்மலை கிறிஸ்துவ சபை ஜூலை 2018 வாக்குத்தத்தம்
Word of God: Brother Micheal
1.07.2018
சங்கீதம் 81:16
உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.
கன்மலையின் தேனினால் இந்த ஏழாம் மாதத்தில் உன்னைத் திருப்தியாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நம் தேவன் வாக்குமாறாதவர் அவர் நிச்சயமாய் இந்த மாதம் உங்களை திருப்தியாய் நடத்துவார்.
என்னவெல்லாம் அவர் திருப்தி ஆக்கப்போகிறார், யாரையெல்லாம் திருப்தி ஆக்கப்போகிறார், எப்படிப்பட்ட ஆத்துமாக்களை கர்த்தர் திருப்தி ஆக்கப்போகிறார் என்பதை நாம் காண்போம்.
1. தவனமுள்ள ஆத்துமாவை திருப்தியாக்குவார்
சங்கீதம் 107: 8
தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
சங்கீதம் 107: 9
அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
2. கிருபையை கொடுத்து திருப்தியாக்குவார்
சங்கீதம் 90:13
கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.
சங்கீதம் 90:14
நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
சங்கீதம் 90:15
தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.
3. நன்மையினால் உன்னை திருப்தியாக்குவார்
சங்கீதம் 103:5
நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.
4. ஆகாரத்தினால் உன்னை திருப்தியாக்குவார்
லேவியராகமம் 25:19
பூமி தன் கனியைத்தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
5. உச்சிதமான கோதுமையினால் உன்னை திருப்தியாக்குவார்
சங்கீதம் 147:11
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
சங்கீதம் 147:12
எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி.
சங்கீதம் 147:13
அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
சங்கீதம் 147:14
அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment