Wednesday, July 11, 2018

நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்


கன்மலை கிறிஸ்துவ சபை
தேவசெய்தி : Brother Micheal
Date : 08.07.2018

சங்கீதம் 63:7
நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.

1. பரம ராஜ்ஜியம் அடையும் படிக்கு துணை செய்கிறார் 

II தீமோத்தேயு 4:17
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

II தீமோத்தேயு 4:18
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

எதற்காக கர்த்தர் துணை செய்கிறார் என்றால் நாம் அனைவரும் பரம ராஜ்ஜியம் அடையும் படிக்கு துணை செய்கிறார். வசனம் சொல்கிறது பரலோகத்திற்கு நீங்கள் போகும் படிக்கு கர்த்தர் உங்களை காப்பாற்றுகிறார். 

நமெக்கென்று ஒரு பரம ராஜ்ஜியம் இருக்கிறது, நமக்கென்று ஒரு பரம ராஜா இருக்கிறார், நமக்கென்று ஒரு பரம வீடு ஒன்று இருக்கிறது, நமக்கென்று ஒரு பரம அழைப்பு இருக்கிறது இவைகளை நாம் அடையும் படிக்கு தான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை செய்கிறார். 

2. உன்னை கூர்மையான எந்திரமாய் ஆக்க துணை செய்கிறார் 

ஏசாயா 43:13
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

ஏசாயா 43:14
யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

ஏசாயா 43:15
இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.

ஏசாயா 43:16
அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக்கொண்டிருப்பாய்.

3. உத்தமமாய் நடப்பவர்களுக்கு கர்த்தர் துணை செய்கிறார்

II நாளாகமம் 19:11
இதோ, ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியரும் உங்கள் கைக்குள் உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.

கர்த்தர் யோபுவை கைவிடவே இல்லை அதனால் தான் கர்த்தரே யோபுவுக்கு சாட்சி கொடுக்கிறார். உத்தமமாய் நடப்பவர்களுக்கு கர்த்தர் துணை செய்கிறார்.


4. இஸ்ரவேலருக்கு கர்த்தர் துணை செய்கிறார் 

சங்கீதம் 115:9
இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.

5. ஆரோன் குடும்பத்தாருக்கு கர்த்தர் துணை செய்கிறார் 

சங்கீதம் 115:10
ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.

6. கர்த்தருக்கு பயப்படுபவர்களுக்கு அவர் துணை செய்கிறார் 

சங்கீதம் 115:11
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.



FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment