Wednesday, August 22, 2018

கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்


கன்மலை கிறிஸ்துவ சபை
தேவசெய்தி : Brother KAMAL
Date : 19.08.2018

" கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் "


ஆதியாகமம் 22:14
ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும், ஆபிரகாமுக்கு கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்பட்டது போல உங்களுடைய தேவைகள் அனைத்தும் கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும். 

1. உங்கள் தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும் 

யாத்திராகமம் 17:1
பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.

யாத்திராகமம் 17:2
அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.

யாத்திராகமம் 17:3
ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள்.

யாத்திராகமம் 17:4
மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.

யாத்திராகமம் 17:5
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.

யாத்திராகமம் 17:6
அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.

வனாந்திரத்திலே இஸ்ரவேல் ஜனங்களுக்கு தண்ணீர் தேவையாக இருந்தது அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க, அவர்களின் தேவையை சந்திக்க தேவனாகிய கர்த்தர் அந்த ஓரேப் என்கிற பர்வதத்திலே நிற்கிறதை நாம் வேதத்திலே வாசிக்கிறோம். அதுபோல உங்களுக்கும் உங்கள் தேவைகளை சந்திக்க நமக்கு முன்பாக கர்த்தர் கன்மலையில் நிற்பார். உங்கள் தேவைகள் எதுவாக இருந்தாலும் அவைகளை கர்த்தர் பார்த்துக்கொள்வார். 

2. உங்களுடைய வெற்றி பார்த்துக்கொள்ளப்படும்

யாத்திராகமம் 17:9
அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.

யாத்திராகமம் 17:12
மோசேயின்கைகள் அசர்ந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.

யாத்திராகமம் 17:13
யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்

யாத்திராகமம் 17:15
மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,

யாத்திராகமம் 17:16
அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.

வெற்றியை தரும் பர்வதம் அந்த பர்வதத்தை நோக்கி நீங்கள் ஒவ்வொரு நாளும் ஆண்டவரை நோக்கி ஜெபம் பண்ணுவீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு விரோதமாய் எழும்புகிற எந்த ஒரு அமலேக்கையும்  மேற்கொள்ள ஒரு ஜெயத்தை கொடுக்க யெகோவா நிசியாகிய தேவன் அங்கு உங்களுக்கு வெளிப்படுவார். 

3. உங்கள் விசுவாசம் உறுதிப்படுத்தப்படும் 

I இராஜாக்கள் 18:19
இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.

I இராஜாக்கள் 18:21
அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.

I இராஜாக்கள் 18:37
கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்.

I இராஜாக்கள் 18:38
அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.

I இராஜாக்கள் 18:39
ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.

I இராஜாக்கள் 18:41
பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.

I இராஜாக்கள் 18:42
ஆகாப் போஜனபானம் பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து,

I இராஜாக்கள் 18:45
அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.

கர்த்தருடைய ஊழியக்காரனாகிய எலியா என்கிற தீர்க்கதரிசி ஆகாப் ராஜாவிடத்தில் சொல்லுகிறார். என் உங்களுக்கு முன்பாக உண்மையான தேவன் என்பதை காண்பிப்பார் என விசுவாச அறிக்கை செய்கிறார். அப்படிப்பட்டதான விசுவாசம் எலியாவுக்கு இருந்தது, விசுவாசத்தோடு கருத்தாய் தேவனை நோக்கி ஜெபம் செய்தார். எலியாவின் விசுவாச ஜெபத்தை கேட்டு தேவன் ஒரு பெரிய காரியத்தை செய்ய கர்மேல் பர்வதத்தில் வந்தார். அதுபோல நீங்களும் விசுவாசத்தோடு உங்களை தாழ்த்தி எலியாவை போல ஜெபம் செய்வீர்களானால் உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தி கர்த்தர் உங்கள் வாழ்வில் பெரிய அற்புதங்களை செய்வார்.

4. உங்கள் விண்ணப்பம் பார்த்துக்கொள்ளப்படும்

சங்கீதம் 3:4
நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார்.

விண்ணப்பத்திற்கு பதில் தரும் பர்வதம், கர்த்தர் எனக்கு பரிசுத்த பர்வதத்தில் இருந்து எனக்கு செவிகொடுத்தார் என்று தாவீது சொல்லுகிறார். பரிசுத்த பர்வதத்தில் இருக்கிறவர் சரவல்லமையுள்ள தேவன் அவர் நம் விண்ணப்பத்திற்கு பதில் தரும் பர்வதமாக இருக்கிறார். 

சங்கீதம் 48:1
கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

சங்கீதம் 43:3
உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.

ஏசாயா 55:6
கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

ஏசாயா 56:6
கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும் அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடி ஆசரித்து என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும்,

ஏசாயா 56:7
நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.

வெளிச்சம் நம்மை இருளில் நடவாதபடிக்கு வழிநடத்தும், சத்தியம் நம்மை பரிசுத்த பாதையில் வழிநடத்தும். எனவே கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்திற்கு கடந்து வாருங்கள் அவர் உங்கள் விண்ணப்பங்கள் எல்லாவற்றிற்கும் நிச்சயமாக பதில் தந்து உங்களை நடத்துவார். 

5. உங்களுக்கு வேண்டிய ஒத்தாசை பார்த்துக்கொள்ளப்படும் 

சங்கீதம் 121:1
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.

சங்கீதம் 121:2
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.





FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church 
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment