கன்மலை கிறிஸ்துவ சபை
தேவசெய்தி : Brother Micheal
Date : 26.08.2018
" நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன் "
யாத்திராகமம் 17:6
அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
கர்த்தர் நமக்கு முன்பதாக செல்கிறார், அவர் நமக்கு முன்பதாக செல்வதால் நாம் பெற்று கொள்ளும் ஆசீர்வாதங்களை நாம் இங்கு பார்ப்போம்.
1. அவர் சமுகம் உனக்கு முன்பதாக கடந்துபோகப்பண்ணுவார்
யாத்திராகமம் 33:14
அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
யாத்திராகமம் 33:15
அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்.
யாத்திராகமம் 33:16
எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.
யாத்திராகமம் 33:17
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.
யாத்திராகமம் 33:18
அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.
யாத்திராகமம் 33:19
அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,
யாத்திராகமம் 33:20
நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.
யாத்திராகமம் 33:21
பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.
கர்த்தருடைய எல்லா தயையும் உங்களுக்கு முன்பதாக கடந்து போக பண்ணி உங்களை நடத்துவார். கர்த்தருடைய சமூகம் உங்களுக்கு முன்பதாக செல்லும்.
2. அவர் உனக்கு முன்பாக போய் கனம் உண்டாகப்பண்ணுவார்
லூக்கா 14:10
நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.
லூக்கா 14:11
தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
லூக்கா 14:7
விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
லூக்கா 14:8
ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.
லூக்கா 14:9
அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
லூக்கா 14:12
அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்
லூக்கா 14:13
நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.
லூக்கா 14:14
அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.
கர்த்தர் நம்மையெல்லாம் எவ்வளவு கனம் பண்ணி இருக்கிறார். நம்மை எங்கேயும் தாழ்த்த அவர் விடுவதே இல்லை. ஏனென்றால் தாழ்மை உள்ளவர்களை கர்த்தர் என்றுமே கைவிடுவதில்லை, தாழ்மை உள்ளவர்களை மற்றவர் கண்களுக்கு முன்பதாக கனப்படுத்த நம் தேவன் வல்லவராய் இருக்கிறார். எனவே தேவன் நம்மை கனப்படுத்த வேண்டும் என்றால், நம்மை உயர்த்த வேண்டும் என்றால், நாம் தாழ்மையாய் வாழ பழகி கொள்ள வேண்டும்.
3. அவர்கள் கண்களுக்கு முன்பதாக உன்னை மேன்மைப்படுத்துவார்
யோசுவா 3:7
கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.
ஏன் இங்கு ஆண்டவர் அவர் கண்களுக்கு முன்பதாக என்று குறிப்பிட்டு சொல்லுகிறார் என்றால், நம்மை பற்றி வேறு விதமாய் பார்க்கும் கண்கள் இங்கு அநேகம் உண்டு. நம்மால் இதை செய்ய முடியாது, நம்மால் வாழ்க்கையில் உயர முடியாது, நம் வாழ்க்கை இப்படியே முடிந்து விடும் என்று நம்மை எப்பொழுதும் அலட்சியமாய் பார்க்கும் கண்கள் உண்டு எனவே தான் ஆண்டவர் இங்கு சொல்கிறார் அவர் கண்களுக்கு முன்பதாக உன்னை மேன்மைப்படுத்துவேன். மேன்மைபாராட்டுவது கர்தருடையது, அவர் தமக்கு பிரியமான பிள்ளைகளை மேன்மைப்படுத்துகிறார். நம்முடைய சத்துருக்களுக்கு முன்பதாக நம்மை மேன்மைப்படுத்துகிறார்.
4. அவர் உன் சத்துருக்களுக்கு முன்பதாக ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துகிறார்
சங்கீதம் 23:5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
5. அவர் உனக்கு முன்பதாக தூதனை அனுப்பி வழியை ஆயத்தம்பண்ணுவார்
மாற்கு 1:2
இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
மாற்கு 1:3
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;
மாற்கு 1:4
யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான்.
கர்த்தர் உங்களுக்கு முன்பதாக தூதனை அனுப்புகிறேன். எதற்காக என்றால் உங்களுக்கு ஒரு வழியை ஆயத்தம் பண்ண அது என்ன வழி என்று நமக்கு தெரியாது ஆனால் கர்த்தர் உங்கள் வழிகளை அறிந்து இருக்கிறார், அவர் உங்களுக்கு முன்பதாக அவர் தூதரை அனுப்பி உங்கள் வழியை ஆயத்தம் பண்ணுவார்.
FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment