Wednesday, October 24, 2018

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்

கன்மலை கிறிஸ்துவ சபை 
Word of God : Brother Micheal 
Date : 21.10.2018





ரோமர் 12:12
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.

1. நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்

ஆதியாகமம் 12:1
கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.

ஆதியாகமம் 12:2
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

ஆதியாகமம் 12:3
உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

ஆதியாகமம் 12:4
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.


ஆபிரகாம் கர்த்தர் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்து இருந்தார், அந்த நம்பிக்கையிலே அவர் சந்தோஷமாய் இருந்தார். நம்புவதற்கு சாத்திய கூறுகள் இல்லாத போதிலும் கர்த்தர் சொன்ன வார்த்தையினை விசுவாசித்து அதன் படி நடந்தார். இதன்நிமித்தமாக கர்த்தர் ஆபிரகாமை இரண்டாம் வசனத்தில் தாம் சொன்னது போல ஆபிரகாமை பெரிய ஜாதியாக்கி, அவர் பெயரை பெருமைப்படுத்தி ஆசீர்வதித்தார். அப்படிப்பட்ட நம்பிக்கை கர்த்தர் மீது நாம் வைக்க வேண்டும். அவர் சொன்ன வாக்குத்தத்தங்களை ஆபிரகாமை போல முழுநிச்சமாய் விசுவாசிக்கும் பொழுது நாம் தேவனிடத்தில் இருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம். 

2. உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்

யோபு 1:12
கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.

யோபு 1:13
பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது,

யோபு 1:14
ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்துகொண்டிருக்கையில்,

யோபு 1:15
சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

யோபு 1:16
இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

யோபு 1:17
இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

யோபு 1:18
இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது,

யோபு 1:19
வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

யோபு 1:20
அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:

யோபு 1:21
நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.

யோபு சடுதியில் தனக்கு உண்டான எல்லாவற்றையும் இழந்து, கடினமான பாடுகளின் மத்தியில் கடந்து சென்றாலும் அவர் கர்த்தருடைய நாமத்தை தூஷிக்கவில்லை, இத்தனைக்கும் அவர் பாவமே செய்யாதவர் அவர் உத்தமன் என்று கர்த்தரே சாட்சி கொடுத்து இருக்கிறார். இருப்பினும் அவர் தேவனை எதிர்த்து பேசவில்லை யோபு தன் உபத்திரவத்திலே பொறுமையாய் இருந்தார். தேவன் அவர் முன்னிலைமையை காட்டிலும் இரண்டத்தனையாய் ஆசீர்வதித்தார், அதுபோல நாமும் நம்முடைய உபத்திரவத்தின் பாதையிலே யோபுவை போல பொறுமையாய் இருக்க வேண்டும். உலகத்தை ஜெயித்த தேவன் நம்மோடு எந்நாளும் இருக்கிறார் அவர் ஒரு போதும் நம்மை கைவிடமாட்டார்.


3. ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்

அப்போஸ்தலர் 16:25
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அப்போஸ்தலர் 16:26
சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.

பவுலும் சீலாவும் அநேக அடிபட்டு சிறையில் உட்காவலறையிலே அவர்களை கால்களைத் தொழுமரத்தில் கட்டி இருந்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பவுலும் சீலாவும் ஜெபம் பண்ணி தேவனை துதித்து கொண்டு இருந்தார்கள் என்று வேதம் சொல்கிறது, அவ்வாறு அவர்கள் ஜெபம் பண்ணுகையில் சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி அதிர்ந்து உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.பவுலும் சீலாவும் ஜெபத்தில் உறுதியாய் தரித்து இருந்தார்கள். நம்முடைய ஜெபம் அப்படியாக இருக்க வேண்டும். நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்து இருந்தால் விடுதலை நமக்கு நிச்சயம். எனவே ஜெபத்தினில் உறுதியாய் தரித்து இருப்போம். 




FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church 
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment