கன்மலை கிறிஸ்துவ சபை
Word of God : Brother Kamal
Date : 21.10.2018
ஏசாயா 62:3
நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.
நாம் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறோம். நாம் அவருடைய கரத்தின் கிரியைகளாய் இருக்கிறோம். நம் தேவனாகிய கர்த்தர் இனி உங்களை அவருடைய கரத்திலே அலங்கார கிரீடமாகவும், ராஜ முடியுமாய் இருப்பாய் வாகு கொடுக்கிறார்.
ஏசாயா 62:4
நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்.
இனி நீங்கள் கைவிடப்பட்டவர்கள் அல்ல, இனி நீங்கள் பாழாக்கப்பட்டவர்களும் அல்ல மாறாக உங்களை கர்த்தர் தன் கையிலே அலங்காரமான கிரீடமாகவும், ராஜ முடியுமாயும் வைத்து இருக்கிறார்.
யாரை கர்த்தர் அலங்காரமான கிரீடமாகவும், ராஜ முடியுமாயும் வைப்பார் ?
வேதகாமத்தில் இருந்து மூன்று பேரை குறித்து பார்ப்போம் அவர்களை எப்படி கர்த்தர் அலங்காரமான கிரீடமாகவும் ராஜமுடியாகவும் மாற்றினார் என்பதை காண்போம்.
1. எஸ்தர்
இந்த மகளை குறித்து வேதம் என்ன சொல்கிறது ? சூசான் என்ற நகரத்தில் சிறையிருப்பில் இருந்த ஒரு பெண். அப்படிப்பட்ட சிறையிருப்பில் இருந்த எஸ்தரை தான் கர்த்தர் அலங்காரமான கிரீடமாகவும், ராஜ முடியுமாகவும் மாற்றினார். எஸ்தர் தன் எதிர் காலத்தை குறித்து நிச்சயமில்லாத படிக்கு ஒரு கேள்வி குறியோடு வாழ்ந்து கொண்டு இருந்த மகள். நம் வாழ்க்கையிலும் கூட எஸ்தரை போல சிறையிருப்புக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கலாம், கைவிடப்பட்டவர்களாய் இருக்கலாம். எதிர்காலம் நிச்சயமற்றதாய் இருக்க கூடிய நிலையில் இருக்கலாம் எனக்கு அன்பானவர்களே கர்த்தர் சொல்லுகிறார் எஸ்தரை அலங்காரமான கிரீடமாகவும், ராஜ முடியுமாயும் மாற்றின தேவன் உங்களையும் மாற்றுவார்.
எஸ்தர் 2:9
அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.
எஸ்தர் 4:16
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
கர்த்தர் எஸ்தரை சுத்திகரித்து அலங்கரிக்கிறார். தன் சொந்த ஜனங்களுக்காக உபவாசித்து ஜெபிக்கக்கூடிய ஜெப ஆவியை தந்து அலங்கரித்தார், மேலும் தன் சொந்த ஜனங்களுக்காக திறப்பிலே தைரியமாக ஜெபிக்கும் தைரியத்தை கொடுத்து கர்த்தர் அலங்கரித்தார். இப்படிப்பட்ட அளகரிப்பினால் தேவன் எஸ்தரை மாற்றினார்.
எஸ்தரை எப்படி ராஜமுடியாய் மாற்றினார் ?
எஸ்தர் 2:17
ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது; ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான்.
எஸ்தர் 8:7
அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்மேல் தன் கையைப்போட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.
எஸ்தர் 8:8
இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள்; ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.
எஸ்தரை அலங்கார கிரீடமாக மாற்றின கர்த்தர் ராஜ முடியுமாகவும் மாற்றினார். மேலும் யூத ஜனங்களை காப்பாற்றும் அதிகாரத்தையும் அகஸ்வேறு ராஜ எஸ்தருக்கு அளித்தார். எஸ்தரின் வாழ்க்கை சந்தோஷமாகவும், ஆசீர்வாதமாகவும் மாறியது அது போல் உங்களையும் தேவன் அலங்கரிப்பார்.
2. யோசேப்பு
யோசேப்பு எகிப்திலே ஒரு அடிமையாக விற்கப்பட்டார், அடிமையாக இருந்த யோசேப்பை கர்த்தர் அலங்கரித்து எகிப்து தேசத்துக்கு அதிபதியாக ஆக்கினார். யோசேப்பின் சொந்த சகோதரர்களே அவருக்கு விரோதமாய் எழும்பினர். குழியிலே போடப்பட்டார். இஸ்மாவேலர்கள் கையில் விற்கப்பட்ட படியாய் கடந்து வருகிறார் தன் வாழ்விலே தான் செய்யாத குற்றத்துக்காக சிறையில் தள்ளப்படுகிறார்.
யோசேப்பை தேவன் எவ்வாறு அலங்கரித்தார் ?
ஆதியாகமம் 39:2
கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.
ஆதியாகமம் 39:3
கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு:
ஆதியாகமம் 39:23
கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.
யோசேப்பு காரிய சித்தி உள்ளவராக இருந்தார். அவர் செய்த எல்லா காரியங்களையும் தேவன் வாய்க்கச்செய்தார். போத்திபார் வீட்டில் யோசேப்பின் நிமித்தமாக தேவன் எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.
ஆதியாகமம் 40:8
அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
ஆதியாகமம் 41:15
பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான்.
தன்னோடு சிறையில் இருந்த இரண்டு பானபாத்திரக்காரரின் சொப்பனத்தையும், பார்வோன் ராஜாவின் சொப்பனத்தையும் விளக்கும் வரத்தை கரத்தை யோசேப்புக்கு வைத்து இருந்தார்.
ஆதியாகமம் 41:39
பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.
ஆதியாகமம் 45:5
என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
தனக்கு தீமை செய்த தன் சகாதாரர்களை யோசேப்பு மன்னித்து அவர்களுக்கு நன்மை செய்தார். இப்படியாக தேவன் யோசேப்பை அலங்கரித்தார். உங்களுக்கு இருக்கிற இடத்திலே, வேலை ஸ்தலத்திலே ஒரு அடிமையை போல காணப்பட்டாலும் ஏற்ற காலத்தில் கர்த்தர் அந்த அடிமைத்தனத்தை அகற்றி அலங்கார கிரீடமாக மாற்றுவார்.
ஆதியாகமம் 41:40
நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான்.
ஆதியாகமம் 41:41
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்து தேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி,
யோசேப்பை எகிப்து தேசம் முழுமைக்கும் தேவன் அதிபதியாக ஆக்கினார் . யோசேப்பை போல உங்கள் அடிமைத்தன வாழ்வை கர்த்தர் மாற்றி அலங்கார கிரீடமாகவும், ராஜமுடியுமாயும் வைப்பார்.
3. ரூத்
இந்த ரூத் என்கிற ஸ்திரி யார் ? ஒரு மோவாபிய ஸ்திரி என்று வேதம் சொல்கிறது. அது மாத்திரம் அல்ல அவள் பாவம் நிறைந்த ஒரு தேசத்தை சேர்ந்தவள் என்றும் வேதம் சொல்கிறது. அப்படிப்பட்ட ரூத்தை கர்த்தர் அலங்கார கிரீடமாகவும், ராஜமுடியுமாகவும் மாற்றினார்.
தேவன் ரூத்தை எவ்வாறு அலங்கரித்தார் ?
ரூத் 1:16
அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
ரூத் 1:17
நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
ரூத் 2:22
அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனுஷர் உன்னை எதிர்க்காதபடிக்கு நீ அவன் வேலைக்காரிகளோடே போகிறது நல்லது என்றாள்.
ரூத் 2:23
அப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் தீருமட்டும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடே கூடியிருந்து, தன் மாமியினிடத்தில் தங்கினாள்.
ரூத் 3:10
அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.
ரூத் 3:11
இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.
இந்த ரூத் தன் மாமியாராகிய நகோமியை நேசிக்கிறவளாக இருந்தாள். இஸ்ரவேல் தேசத்தையும், இஸ்ரவேலின் தேவனையும் நேசிக்கின்ற ஒரு மகளாக காணப்படுகிறாள். மேலும் நகோமி சொல்கிற எல்லா காரியங்களுக்கும் கீழ்ப்படிகிற மகளாக காணப்படுகிறாள். அது மட்டும் அல்லாமல் குணசாலியான ஸ்திரியாய் ரூத் விளங்குகிறாள்.
ரூத்தை எப்படி கர்த்தர் ராஜமுடியாய் ஆக்கினார் ?
ரூத் 4:13
போவாஸ் ரூத்தை விவாகம் பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.
மத்தேயு 1:5
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
மத்தேயு 1:6
ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
ரூத்தை போவாஸ் விவாகம் செய்த படியினால் அவளின் கைவிடப்பட்ட நிலையை கர்த்தர் மாற்றி ஒரு ராஜ ஸ்திரியாய் ஆக்கினார். போவாஸின் மனைவியாக ரூத் வந்து தாவீதுக்கு பாட்டியாக யூதா வம்சத்தில் சேர்க்கப்பட்டாள். ரூத்தை போல கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறீர்களா இயேசுவினிடம் வாருங்கள் அவர் உங்கள் பாவங்களை எல்லாம் கழுவி உங்கள் பெயரை ஜீவ புஸ்தகத்தில் சேர்த்து கொள்வார். இந்த மூன்று பேரினுடைய கர்த்தர் அவர்களை அலங்கார கிரீடமாகவும் ராஜமுடியாகவும் வைத்தாரே அது போல உங்களையும் தேவன் மாற்றுவார். ஆமென்.
FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment