கன்மலை கிறிஸ்துவ சபை
Word of God : Brother Micheal
Date : 11.11.2018
எபிரெயர் 4:9
ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது.
தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வரப்போகிறது இந்த ஆண்டை முடிக்கும் போது நீங்கள் அமரிக்கையாக முடிப்பீர்கள்.
1. இனி நீ அழுதுகொண்டிராய்
ஏசாயா 30:19
சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்.
இனி நீங்கள் அழுது கொண்டு இருப்பதில்லை நம்முடைய அழுகையின் சத்தத்தை கேட்பவர் நமக்கு உண்டு அவர் உங்கள் கவலைகளை எல்லாம் போக்கி உங்களுக்கு சமாதானத்தை கட்டளையிடுவார்.
2. இனி நீ பாவம் செய்யாதே
யோவான் 8:9
அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.
யோவான் 8:10
இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
யோவான் 8:11
அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
3. இனி நீ அடிமையாயிராய்
கலாத்தியர் 4:7
ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.
4. இனி நீ தீங்கைக் காணாதிருப்பாய்
செப்பனியா 3:15
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
5. இனி துஷ்டன் உன் வழியாய் கடந்து வருவது இல்லை
நாகூம் 1:15
இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன்பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுதும் சங்கரிக்கப்பட்டான்.
அவர் உன் கண்ணீரை துடைத்து, உன் பாவங்களை மன்னித்து, உன்னை அவர் புத்திரனாய் மாற்றுவார் இனி நீ தீங்கைக் காணாதிருப்பாய், இனி நீ துஷ்டன் உன் வழியாய் கடந்து வருவது இல்லை அவன் முழுதும் சங்கரிக்கப்பட்டான்.
FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment