Tuesday, November 20, 2018

என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது


கன்மலை கிறிஸ்துவ சபை 
Word of God : Brother Micheal
Date : 18.11.2018

" என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது "


சங்கீதம் 31:15
என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.

1. அவர் கரம் உன்னை பாதுகாக்கும் 

யாத்திராகமம் 33:22
என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்.

அவர் கரத்தினால் உன்னை மூடுவார். கன்மலை என்று சொன்னால் கிறிஸ்து என்று அர்த்தம் கன்மலை வெடிப்பில் என்று இங்கு நாம் வாசிக்கிறோம் கிறிஸ்துவாகிய சரீரத்தின் காயங்கள் நம்மை பாதுகாக்கிறது, வசனம் இப்படியாய் சொல்கிறது அவருடைய தழும்புகளினாலே நாம் குணமாகிறோம். 

ஏசாயா 53:5
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

மகிமை என்று சொல்லும் பொழுது புதிய ஏற்பாட்டு காலத்தில் அது கர்த்தருடைய கிருபையை குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற ரத்தத்தினாலே நாம் மீட்கப்பட்டோம். மோசேயை எப்படி தேவன் தன்னுடைய மகிமையை கடந்து போக செய்து கன்மலை வெடிப்பில் வைத்து பாதுகாத்தாரோ அது போல இன்றைக்கு நமக்காக, நம் பாவங்களுக்காக சிலுவையில் இயேசு தன்னையே ஒப்புக்கொடுத்தார். நமக்கு எந்த வித தீங்கும் வராதபடிக்கு அவர் நம்மை தன் காயப்பட்ட கரத்தினால் மூடி நம்மை பாதுகாக்கிறார். சத்துருக்கள் எவ்வளவு எழும்பினாலும் நம்மை நிர்மூலம் ஆகாத படிக்கு தேவனுடைய கரம் நம்மை மூடி பாதுகாக்கிறது.



2. அவர் கரம் உன்னை மேன்மைப்படுத்தும் 

I நாளாகமம் 29:12
ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

3. அவர் கரம் உன்னை நன்மையினால் திருப்தியாக்கும்
சங்கீதம் 104:27
ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.

சங்கீதம் 104:28
நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத்திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.

நம்  வாழ்க்கையில் நாம் இதுவரைக்கும் திருப்தியாய் இருப்பது கர்த்தருடைய நன்மை செய்கிற கரம் எப்பொழுதும் நம்மோடு கூட இருப்பதினால் தான். ஏற்ற வேலை வரும் பொழுது அவர் நம்மை திருப்தியாக்குகிறார். நன்மை செய்கிற கரம் நம்மோடு உண்டு. 




FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church 
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment