Wednesday, November 28, 2018

அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்


கன்மலை கிறிஸ்துவ சபை 
Word of God : Brother Kamal
Date : 25.11.2018





சங்கீதம் 37:5
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.

நம் ஆண்டவரே காரியங்களை வாய்க்கப்பண்ணுகிறார். நம்முடைய முயற்சிகள் அல்ல, நம்முடைய திறமைகள் அல்ல இவைகளுக்கு மேலாக கர்த்தரே நம்முடைய காரியங்களை வாய்க்க செய்கிறார். நம்முடைய வாழ்க்கையிலே காரியங்கள் அனுகூலமாக, நேர்த்தியாக, அந்தந்த காலத்தில் நடக்க வேண்டுமானால் தேவன் ஒருவரால் மட்டுமே அதனை வாய்க்க செய்ய முடியும். நம் காரியங்கள் எதுவாக இருந்தாலும், அவர் சமூகத்தில் வைத்து ஜெபிக்கும் பொழுது தேவனாகிய கர்த்தர் காரியங்களை கைகூடி வரச்செய்வார்.

நம் காரியங்கள் வாய்க்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும் ?

1.  நம் வழியை கர்த்தருக்கு ஒப்புவிக்க வேண்டும் 
2. அவர் மேல் நம்பிக்கையாய் இருக்க வேண்டும் 

என்ன வந்தாலும் நான் முடிவு பரியந்தம் கர்த்தருக்காக நிலைத்து நிற்பேன் என்கிறதான தீர்மானம் நாம் எடுக்க வேண்டும். நான் என்ன செய்தாலும் என் ஆண்டவருக்கே செய்வேன், எனக்காக இந்த பூலோகத்தில் வந்தவருக்காக, எனக்காக, என் பாவங்களுக்காக மரித்தவருக்காக, நான் என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து வாழுவேன் என்கிறதான தீர்மானத்தினை நாம் எடுக்க வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையில் வெற்றியுடன் வாழ தேவனுக்கு நம் வழியை ஒப்புக்கொடுத்தல் அவசியமான ஒன்று அதற்க்கு நாம் முதலில் நம் இருதயத்தில் தீர்மானிக்க வேண்டும். 

இருதயத்தில் தீர்மானம் 
உலக பிராகாரமாக எடுக்கப்படும் அநேக தீர்மானங்கள் எழுத்தளவில் தொடங்கி பிறகு நடைமுறைக்கு வருகிறது சில சமயங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறையாக செயல் படுவதே அரிது. எனக்கு அன்பானவர்களே உங்களுக்கும், எனக்கும் எடுக்கப்படும் தீர்மானங்கள் உள்ளத்தில் தொடங்குகிறது. அநேகர் மனதளவில் தேவனுக்கு தன்னை ஒப்பு கொடுப்பது இல்லை, நாம் நம் முழு இருதயத்தோடு நம் வழிகளை கர்த்தருக்கு ஒப்பு கொடுக்க வேண்டும். 

தானியேல் 1:8
தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.

உங்கள் இருதயத்தில் நீங்கள் தீர்மானிக்கின்ற தீர்மானத்தை கர்த்தர் அங்கீகரிக்கிறார். அதை நிறைவேற்றவும் உங்களுக்கு உதவி செய்கிறார், அநேகருடைய வாழ்க்கையிலே அந்த நம்பிக்கை இல்லை நாம் விசுவாசத்தோடு ஒரு தீர்மானத்தை கர்த்தருடைய சமூகத்தில் எடுப்போமே ஆனால் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற கர்த்தர் நமக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை நம்மிடத்தில் இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை தானியேலுக்கு இருந்தது. அதனால் தான் அவரை தேவன் உயர்த்தினார். 

நாம் ஒப்புக்கொடுக்கிற தீர்மானம் நம் செயலில் சோதிக்கப்படுகிறது

தானியேல் 1:12
பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,

தானியேல் 1:13
எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான்.

தானியேல் 1:14
அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச் சோதித்துப்பார்த்தான்.

தானியேல் 1:15
பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.

இங்கே பத்து நாள் வரைக்கும் சோதித்து பாரும் என்று தானியேல் சவால் விடுகிறார், தைரியமாக சொல்கிறார் காரணம் தானியேல் ஆராதிக்கிற தேவன் தன் இருதயத்தின் தீர்மானத்தினை, விருப்பத்தினை நிறைவேற்ற வல்லவர் என்பதனை அறிந்திருந்தார். 

ஆதியாகமம் 22:12
அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

ஆபிரகாம் ஆண்டவரை முழுமையாய் விசுவாசிக்கிறார் என்கிற தீர்மானம் ஆனது அவருடைய செயலினால் சோதிக்கப்படுகிறது. அந்த செயலை செயல் படுத்தும் பொழுது தான் ஆண்டவர் அவரை அறிந்து கொண்டார். 

ரோமர் 6:13
நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.

அப்போஸ்தலர் 15:25
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட,

I சாமுவேல் 1:28
ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

ரோமர் 12:1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.


2. அவர் மேல் நம்பிக்கையாய் இருக்க வேண்டும்

எரேமியா 17:7
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

சங்கீதம் 34:8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

சங்கீதம் 9:18
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.

யோபு 13:15
அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.

II நாளாகமம் 32:8
அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.

கர்த்தருடைய ஆசீர்வாதத்தை பெற வேண்டும் என்றால் முதலில் நம் வழிகள் அனைத்தையும் அவரிடத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும். அவரிடத்தில் நம்பிக்கையாய் இருக்க வேண்டும். அப்பொழுது அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் ஆமென். 












FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church 
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment