Wednesday, June 5, 2019

யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக


கன்மலை கிறிஸ்துவ சபை 
Word of God : Brother Micheal
Date : 02.06.2019


சங்கீதம் 20:1
ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

1. அவர் ஒத்தாசை அனுப்பி ஆதரிப்பார் 

சங்கீதம் 20:2
அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.

நம் தேவைகள் என்னென்ன என்பதை கர்த்தர் அறிந்து வைத்து இருக்கிறார். அவர் மறந்து போக வில்லை. அவை எல்லாவற்றையும் நேர்த்தியாய் ஏற்ற காலத்தில் கர்த்தர் செய்து முடிப்பார்.  உங்களுக்கு ஒத்தாசை அனுப்பி ஆதரிப்பார். அந்த ஒத்தாசை பரிசுத்த ஸ்தலத்தில் இருந்து வருகிற ஒத்தாசை. 

2.  அவர் உமது மனவிருப்பதின் ஆலோசனைகளை நிறைவேற்றுவார் 

சங்கீதம் 20:3
நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக.

சங்கீதம் 20:4
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

நீங்கள் கர்த்தருக்காக செய்த எல்லாவற்றையும் கர்த்தர் பரலோகத்தில் இருந்து நினைத்தருளுகிறார். நீங்கள் எளியவர்களுக்கு செய்கிற ஒவ்வொரு காரியமும் அது நம் தேவனுக்கே செய்வதாகும். கர்த்தர் உங்களுடைய சிறிய காணிக்கைகளையும் கர்த்தர் நினைத்து பார்த்து அதனை பிரியமாய் ஏற்றுக்கொள்கிறார். நீங்கள் இல்லாத நிலையிலும் கர்த்தருக்காக தந்தபடியால் நமது மனவிருப்பதின் காரியங்களை செய்தருளுவார், அது மட்டும் இல்லாமல் நமது ஆலோசனைகளை எல்லாம் நிறைவேற்றுவார். 


3. அவர் உன்னை இரட்சித்து உன் ஜெபத்தை கேட்டருள்வார் 

சங்கீதம் 20:5
நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

சங்கீதம் 20:6
கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.

கர்த்தர் தான் அபிஷேகம் பண்ணினவரை இரட்சிக்கிறார். ஜெபம் தான் தேவனையும், நம்மையும் இணைக்கிறது. நம்முடைய ஜெபத்தை எல்லாம் கர்த்தர் பரிசுத்த வானத்தில் இருந்து கேட்டு நம்முடைய வேண்டுதல்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறார். 

4. அவர் உன் சத்துருக்களை முறிந்து விழும்படி செய்வார் 

சங்கீதம் 20:7
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

சங்கீதம் 20:8
அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.

கர்த்தர் சொல்லுகிறதாவது நீங்கள் விழுந்த இடத்தில் எழுந்து நிமிர்ந்து நிற்க செய்வார். அவர் உங்கள் சத்துருக்களை முறியடிப்பார். அவர்கள் முறிந்து விழுவார்கள். 







FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church 
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment