Tuesday, February 21, 2017

இயேசுவின் நாமம் எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: இயேசுவின் நாமம் எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் 
Date: 29:01:2017
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua

பிலிப்பியர் 2:11
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

பிலிப்பியர் 2:8
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

பிலிப்பியர் 2:9
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

பிலிப்பியர் 2:10
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

உலகத்திலேயே கிடைக்காத விசேஷித்தமான ஒரு கிருபை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு பிதாவாகிய தேவன் தந்தருளினார். அவர் அன்பாகவே இருந்தார், மேய்ப்பனாகவே இருந்தார், பரிசுத்தமாய் இருந்தார், தம்மை தாமே மரணப்பரியந்தம் வரை தாழ்த்தினார். எனவே தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்தின் எல்லா மகிமையையும் துறந்து மானிடராக இந்த பூமியில் வந்து அவதரித்தார். அவர் சிலுவை வரை தன்னை தாழ்த்தினார். இந்த தாழ்மைதான் அவரை உயர்த்தியது, அவர் தன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும் படியாக கீழ்ப்படிந்து தன்னை தாழ்த்தினார். எனவே எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை பிதாவானவர் இயேசுவுக்கு தந்தருளினார். 

கர்த்தரின்  நாமத்தினால் நாம் எவையெல்லாம் பெற்று கொள்ளலாம் என்பதை பற்றி நான்கு விதமான காரியங்களில் இங்கே நாம் காணலாம்.

1. கர்த்தரின் நாமத்தினால் ஆசிர்வாதம் பெறுவீர்கள் 

உபாகமம் 21:5
உன் தேவனாகிய கர்த்தர் தமக்கு ஆராதனை செய்யவும் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் குமாரராகிய ஆசாரியரைத் தெரிந்துகொண்டபடியால், அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே சகல வழக்கும் சகல காயச்சேதமும் தீர்க்கப்படவேண்டும்.

உன்னதமான தேவனின் நாமத்தில் எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் கொடுக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் எல்லோரும் ஆசிர்வதிக்க பட்டிருக்க வேண்டும். 

ஆதியாகமம் 12:2
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

ஆண்டவர் சொல்கிறார் உன் பேரை பெருமை படுத்தி உன்னை ஆசிர்வாதமாய் வைப்பேன். உங்களை பெரிய ஜாதியாக்கி உன் பேரை பெருமை படுத்துவார். நீங்கள் ஆசிர்வாதமாய் இருப்பீர்கள். அன்றைக்கு ஆபிரகாம் எல்லாவற்றையும் விட்டு கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வந்தார். கர்த்தர் அவரை பெரிய ஜாதியாக்கி ஆசிர்வதித்தார். அதே தேவன் உங்களையும் ஆசீர்வதிப்பார். 

யாத்திராகமம் 23:25
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.

கர்த்தரையே நீங்கள் சேவிப்பீர்கள் என்றால் உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் இருக்கும். உங்கள் வீட்டில் அப்பமும், தண்ணீரும் ஒருபோதும் குறைவு படாது. உங்கள் வியாதியை உங்களிடத்திலிருந்து கர்த்தர் நீக்கி போடுவார். 

நீதிமொழிகள் 28:20
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசிர்வாதத்தை பெறுவான். நாம் பெற்று கொண்டது கொஞ்சம் தான். இன்னுமாய் அநேகத்திலே நாம் உண்மையாக இருக்க வேண்டும். நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை நாம் ஆராய்ந்து பார்த்து எதிலே இன்னுமாய் கர்த்தருக்கு உண்மையாக இருக்க வேண்டும். அவரிடத்தில் கேட்டு நாம் கற்று கொள்ள வேண்டும்.
 

2. கர்த்தரின் நாமத்தினால் ஜெயம் பெறுவீர்கள் 

I சாமுவேல் 17:43
பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.

I சாமுவேல் 17:44
பின்னும் அந்தப் பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன் மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான்.

I சாமுவேல் 17:45
அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.

I சாமுவேல் 17:46
இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்.

கோலியாத்து பட்டயம், ஈட்டி, கேடகம், ஆகியவற்றை கொண்டு இஸ்ரவேலிடம் போரிட வந்தான். பின் தாவீதை பார்த்து சபித்தான். நீங்கள் ஜெயிக்க போகிறீர்கள், இந்த பூலோகத்தில் உள்ள யாவரும் கண்டு பயப்படுவார்கள். இஸ்ரவேலின் தேவன் உண்டு என்பதை காணும் படி தாவீதுக்கு கர்த்தர் ஜெயத்தை கொடுத்தார். உங்களை வாட்டி வதைக்கிற எல்லா காரியங்களிலும் நீங்கள் ஜெயிப்பீர்கள். அருமையான தேவ ஜனமே எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை கொடுத்தது எதற்காக உங்களை ஆசிர்வதிப்பதற்காக, உங்களுக்கு ஜெயம் கொடுப்பதற்காக சோர்ந்து போகாதீர்கள் முன்னேறி செல்லுங்கள் கர்த்தர் உங்களுடனே இருக்கிறார்.

I கொரிந்தியர் 15:57
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

உங்கள் வாழ்வில் அனுதினமும் நீங்கள் ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லி அவரை மகிமை படுத்த வேண்டும். உண்மையாகவே தாவீதுக்கு ஜெயம் கொடுத்தார், உங்களுக்கும் ஜெயத்தை அளிக்க நம் தேவனாகிய கர்த்தர் வல்லவராய் இருக்கிறார்.
3. கர்த்தரின் நாமத்தினால் நித்திய ஜீவனை பெறுவீர்கள் 

யோவான் 20:31
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

நாம் நித்திய ஜீவனை அடையும் படிக்கு தான் கர்த்தர் நம்மை தெரிந்து கொண்டார். நித்யத்தை அடைய இயேசுவே வழியாய் இருக்கிறார். அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு அவர் நித்திய ஜீவனை தருகிறார். இயேசு என்னும் நாமமே பரலோகத்திற்கு வழி. 

4. கர்த்தரின் நாமத்தினால் பெலன் அடைவீர்கள் 

அப்போஸ்தலர் 3:11
குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.

அப்போஸ்தலர் 3:12
பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன?

அப்போஸ்தலர் 3:13
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள்.

அப்போஸ்தலர் 3:14
பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டுமென்று கேட்டு,

அப்போஸ்தலர் 3:15
ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.

அப்போஸ்தலர் 3:16
அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினால் அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசம் உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.

இயேசுவின் நாமம் மட்டுமே நம்மை பெலப்படுத்துகிறது. அவரை பற்றும் விசுவாசமே நம்மை பெலப்படுத்துகிறது. 

No comments:

Post a Comment