Sunday, March 19, 2017

அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்
Date: 26:02:2017
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua
    " அநாதி தேவனே உனக்கு அடைக்கலம் "
உபாகமம் 33:27
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.

அநாதி தேவனே உனக்கு அடைக்கலம், கர்த்தர் உங்களுடைய சத்ருக்களை துரத்தி விட இன்றைக்கு கட்டளையிடுவார். நமக்கு எல்லா விதத்திலும் நம் தேவன் நமக்கு அடைக்கலம் கொடுத்து இருக்கிறார். நாம் கடந்து வந்த பாதையிலே நம் தேவன் எப்படியெல்லாம் அடைக்கலமாய் இருந்திருக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். தேவனே உங்களுக்கு அடைக்கலமாய் இருக்கிறபடியால் எல்லா வித சத்ருக்களில் இருந்தும் உங்களை தப்புவிப்பார்.


யோவேல் 3:16
கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்.


கர்த்தர் நமக்கு எவ்வாறெல்லாம் அடைக்கலமாய் இருக்கிறார் என்பதை மூன்று விதமான காரியங்களில் நாம் காணலாம்.



1. சிறுமைப்பட்ட ஜனத்திற்கு கர்த்தர் அடைக்கலமாய் இருக்கிறார் 

2. நெருக்கத்தில் இருக்கும் ஜனத்திற்கு கர்த்தர் அடைக்கலமாய் இருக்கிறார் 

3. இக்கட்டில் இருக்கும் ஜனத்திற்கு கர்த்தர் அடைக்கலமாய் இருக்கிறார் 

1. சிறுமைப்பட்ட ஜனத்திற்கு கர்த்தர் அடைக்கலமாய் இருக்கிறார் 

சங்கீதம் 9:9
சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.

சங்கீதம் 9:12
இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.

சிறுமைப்பட்டவர்களுக்கு கர்த்தர் அடைக்கலமாய் இருக்கிறார். நீங்கள் சிறுமையில் இருந்தாலும் நீங்கள் கர்த்தரையே பற்றி அவரையே நோக்கி கூப்பிடுவதால் உங்கள் கூப்பிடுதலை என்றுமே அவர் மறப்பதில்லை 

சங்கீதம் 140:12
சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு வழக்காடுகிறவராக இருக்கிறார். எதிர் தரப்பில் பிசாசானவன் நமக்கு எதிராக வாதாடுகிறான். ஆனால் கர்த்தர் சொல்லுகிறார் சிறுமையானவர்களின் வழக்கையும், எளியவர்களின், நியாயத்தையும் கர்த்தர் விசாரிக்க வல்லவராய் இருக்கிறார். அதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அவர் நமக்கு நீதி, நியாயம் செய்கிறவர் பிசாசானவன் நாம் விண்ணப்பமாய் வைக்கிற ஜெபத்தை அவன் எதிர் தரப்பில் வாதாடி நமக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை தடுக்க முயற்சிக்கிறான். அனால் கர்த்தர் நமக்கு நிச்சயமாய் நியாயம் செய்வார். 

நாகூம் 1:12

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டுபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.



ஏன் உங்களை கர்த்தர் சிறுமை படுத்தினார்? ஏன் சில நேரங்களில் உங்களுக்கு நெருக்கம் வருகிறது? நீங்கள் உணர வேண்டும் என்பதற்காக நீங்கள் அறுப்புண்டு போகாத படிக்கு தான் கர்த்தர் உங்களை சிறுமை படுத்துகிறார். எனினும் கர்த்தர் நம் சிறுமையிலும் நம் மீது நினைவாய் இருக்கிறார். ஏற்ற காலத்திலே உங்களை உயர்த்துவார். 



இனிவரும் காலங்களிலே கர்த்தர் உங்களை சிறுமை படுத்தாத படிக்கு உங்களை பெரிய வாய்க்காலாய் மாற்றுவார். 


II கொரிந்தியர் 7:6

ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார்.



2. நெருக்கத்தில் இருக்கும் ஜனத்திற்கு கர்த்தர் அடைக்கலமாய் இருக்கிறார் 



சங்கீதம் 59:16
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.



கர்த்தரை நம்புகிறவர்களுக்கு ஒரு நன்மையையும் குறைவு படாது என்று வசனம் சொல்கிறது. நீங்கள் எதிர்பார்த்திருந்த முடிவு அவராலே வரும். 



சங்கீதம்54:7

அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.


சத்ருக்களில் நீதி சரிக்கட்டுதலை நீங்கள் காண்பீர்கள் உனக்கு உண்டான எல்லா நெருக்கத்திலும் நீக்கி கர்த்தர் விடுவிப்பார்.

II சாமுவேல் 22:7
எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.

நமக்கு நெருக்கம் வரும் வேளையில் கர்த்தரையே நோக்கி கூப்பிடவேண்டும் அவர் உங்கள் கூப்பிடுதலை கேட்டருள்வார். 

யோபு 36:16
அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.

கர்த்தர் உங்களை எல்லா நெருக்கத்தில் இருந்து விலக்கி விசாலமாய் வைப்பார் மேலும் உங்களின் போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.



3. இக்கட்டில் இருக்கும் ஜனத்திற்கு கர்த்தர் அடைக்கலமாய் இருக்கிறார் 

நீதிமொழிகள் 11:8
நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.



நீதிமான்களாகிய உங்களை கர்த்தர் இக்கட்டில் இருந்து விடுவிப்பார்.



நெகேமியா 9:37

அதின் வருமானம் எங்கள் பாவங்களினிமித்தம் நீர் எங்கள்மேல் வைத்த ராஜாக்களுக்குத் திரளாகப்போகிறது; அவர்கள் தங்களுக்கு இஷ்டமானபடியே எங்கள் சரீரங்களையும் எங்கள் மிருக ஜீவன்களையும் ஆளுகிறார்கள்; நாங்கள் மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம்.


நெகேமியா 9:38
இவையெல்லாம் இப்படி இருக்கிறபடியால், நாங்கள் உறுதியான உடன்படிக்கைபண்ணி அதை எழுதிவைக்கிறோம்; எங்கள் பிரபுக்களும் எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரைபோடுவார்கள் என்றார்கள்.



ஆண்டவர் உங்களை இக்கட்டான சூழ்நிலைகளில் விடவே மாட்டார், அவர் உங்களுக்கு இக்கட்டான நேரத்தில் இளைப்பாறுதல் தருவார். 

No comments:

Post a Comment