Monday, April 3, 2017

கர்த்தர் உங்களை பெலப்படுத்துவார்

கன்மலை கிறிஸ்தவ சபை
Title: கர்த்தர் உங்களை பெலப்படுத்துவார்
Date: 19:03:2017
Speaker: Brother Kamal

Worship : Brother Micheal & Brother Joshua

" கர்த்தர் உங்களை பெலப்படுத்துவார் "

நியாயாதிபதிகள் 6;14
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.

ஆண்டவர் உங்களைப்பார்த்து சொல்லுகிற வார்த்தை உனக்கு இருக்கிற இந்த பலத்தோடு போ உன்னை அனுப்புகிறவர் நானல்லவா. கர்த்தர் கிதியோனை பார்த்து தம்முடைய வார்த்தையின் மூலமாக தேற்றினார். கிதியோனை பெலப்படுத்தினார். இஸ்ரவேல் ஜனங்களையும், கிதியோனையும் பெலப்படுத்த கர்த்தர் கொடுத்த வார்த்தை உனக்கு இருக்கிற இந்த பலத்தோடு போ உன்னை அனுப்புவது நான் தான் என்று கர்த்தர் திடப்படுத்தி, ஸ்திரப்படுத்தினார்.
 

இந்த நியாதிபதிகள் ஆறாம் அதிகாரத்தில் தேவ ஜனங்களுடைய வாழ்க்கையிலே அவர்களுடைய உள்ளங்கள் சுக்கு நூறாக உடைக்கப்பட்ட ஒரு நிலைமை. தங்களுடைய வாழ்க்கையிலே பல விதமான இன்னல்கள், இக்கட்டுகள், வேதனைகள் நெருக்கங்களை அனுபவித்து கொண்டு இருந்த நேரம் அது. காரணம் என்ன என்றால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமான எதிரிகள் இருந்தார்கள். அவர்கள் தான் மீதியானியர்கள். கர்த்தர் அவர்களை மீதியானியரின் கைக்கு ஒப்புக்கொடுத்தார் என்று நியதிபதிகள் 6:1 ஆம் வசனம் சொல்கிறது.  அப்படி கர்த்தர் செய்ததற்கு காரணம் அவர்கள் ஆண்டவருக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். 

அப்படிப்பட்ட நெருக்கத்தின் மத்தியில் அவர்கள் தேவனை நோக்கி முறையிடுகிறார்கள். ஆண்டவர் அவர்களின் முறையீட்டை கேட்டு அவர்களை பெலப்படுத்தி இஸ்ரவேல் ஜனங்களுக்கு விடுதலை அளிக்க கர்த்தர் கிதியோனை எழுப்பிகிறார். தேவ ஜனமாகிய நமக்கு தேவ பெலன் மிகவும் அவசியம். கர்த்தருடைய பெலன் தான் நமக்கு முக்கியம். ஆகேவ தான் பவுல் சொல்கிறார் என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு என்று சொல்கிறார். 

கர்த்தர் நம் ஆவி, ஆத்தும, சரீரங்களில் பெலன் தருபவர் 

லூக்கா 1:80
அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.

ஆவியில் பெலன் அடைய வேண்டும். ஆவியில் பெலத்தை தருகிறவர் நம் ஆண்டவர். அதனாலே தான் சபை கூடி வருதலை விட்டுவிட கூடாது. ஆவியில் அனலாய் இருக்க இருக்க வேண்டும்.

சங்கீதம் 138:3
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;

நம் தேவன் ஆவியில் பெலன் தருகிறவர் மட்டும் அல்ல ஆத்துமாவில் பெலன் தருபவர்.

எண்ணாகமம் 23:22
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.

நம் ஆண்டவர் நம் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பெலன் தருபவர். நம்மை கர்த்தர் எவ்வாறெல்லாம் பெலப்படுத்துகிறார் என்பதை மூன்று விதமான காரியங்களில் நாம் காணலாம். 

1. கர்த்தருடைய வார்த்தையினால் வரும் பெலன் 

நியாயாதிபதிகள் 6;14
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.

நெருக்கத்தின் மத்தியில் தான் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை நோக்கி முறையிட ஆரம்பித்தார்கள். ஆண்டவரை நோக்கி கூப்பிட்டார்கள், எங்கள் பாவங்களை மன்னியும், நாங்கள் உமக்கு துரோகம் செய்தோம் என்று அர்ப்பணித்த பொழுது தங்களை ஒப்புக்கொடுத்த பொழுது ஜீவனுள்ள தேவன் தம்முடைய வார்த்தையை அனுப்பி தன் ஜனங்களை பெலப்படுத்தினார். கர்த்தருடைய வார்த்தை அவர்களை பெலப்படுத்தியது. சில நேரங்களில் நாம் சோர்ந்து போய் இருக்கும் பொழுது, நம்பிக்கை இழந்து இருக்கும் பொழுது கர்த்தர் தம்முடைய வசனத்தை அனுப்பி எத்தனை முறை நம்மை பெலப்படுத்தியிருக்கிறார். எத்தனையோ தடவை நம் நொறுங்குண்டு சபைக்கு வரும் பொழுதெல்லாம் கர்த்தர் தம் வார்த்தையினால் பெலன் தந்து இருக்கிறார். 

தேவன் தம்முடைய வார்த்தையை அனுப்பி பெலன் தருபவர். அவர்களை விடுவிக்கும் படி எழுப்பப்பட்ட கிதியோனை பார்த்து சொல்கிறார் பராக்கிரமசாலியே என்று அழைக்கிறார். இந்த வேளையிலும் சோர்ந்து போய் நம்பிக்கை இழந்து உள்ளீர்களா? கர்த்தர் உங்களுக்கு சொல்லுகிறதாவது பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடு கூட இருக்கிறார். நம் தேவனாகிய கர்த்தர் தம் வார்த்தையினால் நம்மை பெலப்படுத்துகிறவர். கர்த்தர் ஏற்ற நேரத்திலே நம்மோடு பேசுவார். பெலனிழந்த நேரத்திலே சோர்ந்து போகும் நேரத்திலே திகைத்து நிற்கிற நேரத்திலே கர்த்தர் நம்மை பெலப்படுத்துவார்.

2. கர்த்தருடைய தூதரால் வரும் பெலன் 

இரட்சிக்கப்பட்ட தம்முடைய ஜனங்களுக்கு ஆண்டவர் தூதர்களை வைத்துள்ளார். இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா? என்று எபிரேயர் சொல்லப்பட்டுள்ளது.இது எவ்வளவு பெரிய சிலாக்கியம். சங்கீதம் உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்று வேதம் சொல்கிறது.
 

கர்த்தருடைய தூதரால் வரும் பெலன். கிறிஸ்துவ வாழ்க்கை பாடுகள், நெருக்கங்கள் நிறைந்த வாழ்க்கை ஆகவே தான் இயேசு சொல்கிறார் உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன். அநேக பாடுகள் வந்தாலும் நான் இயேசுவுக்காக நிற்பேன் இயேசுவுக்காக வாழ்வேன் என்ற ஒரு வைராக்கியத்தை தான் கர்த்தர் விரும்புகிறார். அவருடைய தூதரால் வரும் பெலனை கர்த்தர் உங்களுக்கு தருவார். 

I இராஜாக்கள் 19:4
அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,

I இராஜாக்கள் 19:5
ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம் பண்ணு என்றான்.

I இராஜாக்கள் 19:6
அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான்.

I இராஜாக்கள் 19:7
கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்.

I இராஜாக்கள் 19:8
அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனான்.

ஒரு தீர்க்கதரிசி, கர்த்தருடைய ஊழியக்காரர், கர்த்தருக்காக வாழ்ந்தவர் என்னபண்ணுகிறார் என்றால் தன்னுடைய உயிரை காப்பாற்ற தப்பி ஓடுகிறார்.  எலியா செய்ததை எல்லாம் ஆகாப் அரசன் தன் மனைவி யேசபேலுக்கு கூறினான். அவன் எவ்வாறு அனைத்து தீர்க்கதரிசிகளையும் வாளால் கொன்றான் என்றும் கூறினான். எனவே அவள் எலியாவிடம் ஒரு தூதுவனை அனுப்பி, “நாளை இதே நேரத்திற்குள், நீ தீர்க்கதரிசிகளைக் கொன்றது போன்று உன்னைக்கொல்வேன். இல்லாவிட்டால் என்னைத் தெய்வங்கள் கொல்லட்டும்” என்று சொல்லச்செய்தாள்.

எலியா இதைக் கேட்டதும், பயந்தான். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினான். தன்னோடு வேலைக்காரனையும் அழைத்துப்போனான். யூதாவிலுள்ள பெயெர்செபாவிற்குப் போய். அங்கே அவனை விட்டுவிட்டான். பிறகு நாள் முழுவதும் பாலைவனத்தில் அலைந்தான். ஒரு புதரின் அருகில் உட்கார்ந்தான். “இது போதும், கர்த்தாவே! என்னை மரிக்கவிடும். என் முற்பிதாக்களைவிட நான் நல்லவன் அல்ல” என்று வேண்டினான்.

பிறகு அவன் ஒரு மரத்தடியில் படுத்து தூங்கினான். ஒரு தேவதூதன் வந்து அவனைத் தொட்டான். “எழுந்திரு, சாப்பிடு!” என்றான்.  எலியா தன்னருகில் தழலில் சுடப்பட்ட அடையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் இருப்பதைப் பார்த்தான். அவன் உண்டு குடித்து திரும்பத் தூங்கப்போனான்.

பின்னர் எலியா புசித்து, குடித்து தேவனுடைய தூதன் கொடுத்த போஜனத்தின் பெலத்தினாலே நாற்பது நாள் இரவும், பகலும், ஓரேப் மட்டும் நடந்தார். சோர்ந்து போன எலியாவை தட்டி எழுப்பி பெலப்படுத்திய தூதன் ஏன் உங்களை பெலப்படுத்த மாட்டார்.

3. கர்த்தருடைய பெரிதான இரகத்தினால் வரும் பெலன் 


நியாயாதிபதிகள் 16:28
அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி,

நியாயாதிபதிகள் 16:29
சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,

நியாயாதிபதிகள் 16:30
என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

இஸ்ரவேலர் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டை சொந்தமாக்கிக் கொண்டார்கள். நாட்டைப் பங்கிட்டு வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள், சுற்றியிருந்த மக்களால் வந்த ஆபத்துக்கள், அடிமைத்தனம் இவற்றிலிருந்து மக்களை வழிநடத்த, விடுவிக்க நியாயாதிபதிகளை கடவுள் ஏற்படுத்தினார். அவர்களில் சிம்சோனும் ஒருவர். பெலிஸ்தியரிடமிருந்து இஸ்ரவேலரை விடுவிக்க கடவுள் சிம்சோனைத் தெரிந்து கொண்டார். 

இஸ்ரவேலரை அடிமைப்படுத்திய பெலிஸ்தியரை அவ்வப்போது தண்டித்து அழித்து வந்தார் சிம்சோன். அவரது கூடா ஒழுக்கத்தால் பெலிஸ்தியரிடம் பிடிபட்டார். இவரது கண்கள் பிடுங்கப்பட்டன. இரண்டு பெரிய தூண்களினிடையே நிறுத்தப்பட்டார். பெலிஸ்தியர்கள் சிம்சோனைக் கேலிப் பொருளாக்கினார்கள். அந்த நேரத்தில் கடவுளிடம் மன்றாடி ஆற்றலைப் பெற்றார். கடவுளிடம் கேட்டு பலத்தைப் பெற்று பல நூறு பெலிஸ்தியரைக் கொன்று தானும் மடிந்தார். கர்த்தர் சிம்சோனின் மெய் மனஸ்தாபத்திற்கு இறங்கினார். சிம்சோனுக்கு பெலன் தந்தார்.

No comments:

Post a Comment