Sunday, April 9, 2017

கர்த்தர் மகா நீதிபரர்

கன்மலை கிறிஸ்தவ சபை
Title: கர்த்தர் மகா நீதிபரர்
Date: 26:03:2017
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua

" கர்த்தர் மகா நீதிபரர் "

II சாமுவேல் 23:3
இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.

II சாமுவேல் 23:4
அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.


நீதிபரராய் இருக்கிற நம் தேவனாகிய கர்த்தர் சூரியனுடைய விடியற்காலை வெளிச்சம் போல நமக்கு இருப்பார். ஒரு சில நீதிக்காக நீங்கள் காத்து கொண்டு இருக்கலாம். அவர் நமக்கு நிச்சயமாக நீதி செய்வார். கர்த்தர் தான் நம்மை ஆள்பவர், அவர் தான் நம்மை வாழவைப்பவர். அந்த தேவன் நம்மோடு கூட இருக்கிறார். நீதிபரராகிய கர்த்தர் எப்படி நம் வாழ்க்கையில் இருக்கப்போகிறார் என்பதை மூன்று விதமான காரியங்களில் நாம் காணலாம். 

1. அவர் நீதிபரர் ஆகையால் நீங்கள் ஒடுக்கப்படுவதில்லை 

யோபு 37:23
சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக் கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.

கர்த்தர் மகா நீதிபரர் அவர் நம்மை ஒடுக்கமாட்டார். நம் தேவனாகிய கர்த்தர் என்ன சொல்லுகிறார் என்றால் அவர் உங்களை ஒடுக்கமாட்டார். அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர், துன்பத்தின் நேரத்தில், தவிப்பின் மத்தியில், ஒடுக்கப்பட்ட நேரங்களில் கர்த்தர் நமக்கு மகா நீதிபரராய் இருக்கிறார்.

யோபு 34:17
நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?

யோபு 34:18
ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்லத்தகுமோ?

யோபு 34:19
இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.

யாத்திராகமம் 1:12
ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.

உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி பொருளாதார நெருக்கங்கள் வருகிறதா, குடும்பத்தில் தினம் சண்டை சச்சரவுகள் வருகிறதா, உங்கள் வாழ்க்கையில் பல விதமான சோதனைகள் வருகிறதா, இன்றைக்கு கர்த்தர் உங்களை பார்த்து சொல்லுகிறதாவது ஒடுக்கப்பட்டு நீங்கள் இருந்தாலும் உங்கள் ஒடுக்கங்களையெல்லாம் மாற்றி உங்களை பலுகி பெருகும் படி இனிவரும் நாள்களில் கர்த்தர் செய்வார்.

2. அவர் நீதிபரர் ஆகையால் உங்கள் துக்கத்தை மாற்றுவார் 

நீதிமொழிகள் 21:12
நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப் பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.

கர்த்தர் நீதிபரராய் இருந்து உங்கள் எல்லையில் உள்ள துன்மார்க்கரின் வீட்டை கவனித்து பார்க்கிறார். அவர்களால் எந்த அநீதியும் செய்யாதவாறு அவர்களை கர்த்தர் தீங்கில் கவிழ்த்துப்போடுவார். 

புலம்பல் 1:13
உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்; என்னைப் பாழாக்கினார்; நித்தம் நான் பலட்சயப்பட்டுப் போகிறேன்.

புலம்பல் 1:14
என் பாதகங்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை விழப்பண்ணினார்; நான் எழுந்திருக்கக் கூடாதபடிக்கு ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

புலம்பல் 1:15
என்னிலுள்ள பராக்கிரமசாலிகளாகிய என்னுடையவர்களெல்லாரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபரை நொறுக்கும்படி எனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர் யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.

புலம்பல் 1:16
இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச் சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.

புலம்பல் 1:17
சீயோன் தன் கைகளை விரிக்கிறாள்; அவளைத் தேற்றுவார் ஒருவருமில்லை; கர்த்தர் யாக்கோபின் சுற்றுப்புறத்தாரை அவனுக்குச் சத்துருக்களாகக் கட்டளையிட்டார்; அவர்களுக்குள்ளே எருசலேம் தூர ஸ்திரீக்கு ஒப்பானாள்.

புலம்பல் 1:18
கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.


கர்த்தர் யார் மீதும் காரணம் இல்லாமல் கோபப்படமாட்டார். அவர் கிருபையும், இரக்கமும் மிகுந்தவர், அவர் பிள்ளைகளாகிய நாம் அவருக்கு விரோதமாக பாவம் செய்யும் பொழுது கர்த்தர் தம்முடைய நீதியினால் கோபப்படுகிறார். நம்மை திருத்துவதற்காகவே நம்மை சிட்சிக்கிறார். இன்றைய காலகட்டத்தில் அநேக வாலிபர்களும், கண்ணியர்களும் சில உலக பிரகாரமான காரியங்களில் சிறைப்பட்டு போய்  இருக்கிறார்கள். எனினும் கர்த்தர் நீதிபரராய் இருந்து அவர்கள் சிறையிருப்பை மாற்றி அவர்கள் துக்கத்தை நீக்கி போடுவார். 

3. அவர் நீதிபரர் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியவைகளை பெற்றுக்கொள்வீர்கள் 

லூக்கா 7:29
யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்.

யோவான்ஸ்நானன் உபதேசம் பண்ணி ஞானஸ்னானம் கொடுத்து வந்த பொழுது அவருடைய உபதேசத்தை கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் தேவனே நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். 

லூக்கா 23:47
நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.

இயேசு கிறிஸ்து பாவிகளுக்காக கல்வாரி சிலுவையில் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கிறார். தம்முடைய ஜீவனை ஏற்றுக்கொள்ளுமாறு பிதாவினிடத்தில் விண்ணப்பம் பண்ணுகிறார். இவற்றையெல்லாம் நூற்றுக்கு அதிபதி காண்கிறார். கல்வாரி சிலுவையில் தன் ஜீவனை ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்துவை கண்டு மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி அவரை மகிமைப்படுத்தினான்  

ஆம் நாம் பெற்றுக்கொள்ள முடியாத வற்றை நமக்கு திரும்ப அளிக்கவே இயேசு கிறிஸ்து நமக்காக தன்னையே ஒப்புக்கொடுத்தார். ஏனென்றால் அவர் நீதிபரர். உண்மையிலே நாம் ஒடுக்கப்பட்டிருக்கிறோம், உண்மையாகவே நாம் துக்கத்தில் இருக்கிறோம், உண்மையாகவே நாம் பெற்று கொள்ளாமல் இருக்கிறோம். இன்றைக்கு கர்த்தர் உங்களை பார்த்து சொல்லுகிறதாவது நீ இனி ஒடுக்கப்படுவதில்லை, நீ பலுகிபெருகுவாய், உன்னுடைய துக்கத்தை கர்த்தர் மாற்றிப்போடுவார், பெற்று கொள்ளாத படி இருக்கிற காரியங்களை நீங்கள் பெற்று கொள்ளும் படி கர்த்தர் செய்வார் ஆமென்.

No comments:

Post a Comment