Wednesday, April 12, 2017

உன்னதத்தின் தேவனுக்கு ஓசன்னா

கன்மலை கிறிஸ்தவ சபை
Title: உன்னதத்தின் தேவனுக்கு ஓசன்னா 
Date: 09:04:2017
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua

" உன்னதத்தின் தேவனுக்கு ஓசன்னா " 

மாற்கு 11:1
அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:

மாற்கு 11:2
உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள்.

மாற்கு 11:3
ஏன் இப்படிச்செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.

மாற்கு 11:4
அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக்கண்டு, அதை அவிழ்த்தார்கள்.

மாற்கு 11:5
அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள்.

மாற்கு 11:6
இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது அவர்களைப் போகவிட்டார்கள்.

மாற்கு 11:7
அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.

மாற்கு 11:8
அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.

மாற்கு 11:9
முன்நடப்பாரும், பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்,

இயேசு தம்முடைய சீஷரில் இரண்டு பேரை அழைத்து சொல்கிறார். உங்களுக்கு எதிரே இருக்கிற ஊருக்குப்போங்கள் என்று, ஆண்டவர் சொல்கிறார் உன் வீட்டுக்கு எதிரே போ, உங்கள் அருகாமையிலேயே பல பேர் இரட்சிக்கப்படாமல் இருக்கிறார்கள் முதலில் அவர்களை வழிநடத்த முற்படுங்கள்.  இரட்சிப்பின் சுவிசேஷத்தை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.


பிறகு மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள் என்று இயேசு அவர்களிடத்தில் சொல்கிறார். நீங்கள் பார்க்க வேண்டியது என்னவென்றால் மனுஷகுமாரர் ஏறியிராத கழுதைகளை பார்க்க வேண்டும். ஆண்டவரை அறியாத மக்களை நோக்கி உங்கள் சுவிசேஷத்தின் பயணம் அமைய வேண்டும். 

பின்னர் இயேசு அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள் என்று சீஷர்களிடத்தில் சொல்வதை நாம் பார்க்கிறோம். நம் ஆண்டவர் உங்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்து இருக்கிறார். யாராவது உங்களை எதிர்த்து கேள்வி கேட்டால், அதற்கு இயேசு இங்கே பதில் அளித்து உள்ளார், ஏன் இப்படிச்செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்று, ஆம் இவர் இயேசுவுடைய பிள்ளை என்று சொல்ல வேண்டும், இயேசுவின் நாமத்தினாலே சொல்லுகிறேன் இது இயேசுவுடைய பிள்ளை என்று சொல்ல வேண்டும். 

கட்டவிழ்ப்பதும், கட்டுவதும் ஆண்டவருடைய வேலை, இது பிசாசின் கட்டிலே கட்டுண்டு இருக்கிறது, அதனை கட்டவிழ்த்து இயேசுவின் அண்டையில் கொண்டு வர நமக்கு உத்தரவு கொடுத்து இருக்கிறார். கட்டப்பட்டு இருக்கிற ஜனங்களை கட்டவிழ்த்து கொண்டு வர ஆண்டவர் உங்களுக்கு அதிகாரம் கொடுத்து இருக்கிறார். யாரும் உங்களை தடுக்க முடியாது. 

நாலாம் வசனம் இவ்வாறாக சொல்லிறது அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக்கண்டு, அதை அவிழ்த்தார்கள்.இரண்டு வழி உள்ளது, ஒன்று நரகத்தின் வழி, மற்றொன்று பரலோகத்தின் வழி, உங்கள் ஆடுகளை நரகத்தின் பாதையில் செல்ல விடாமல் அதை அவிழ்த்து கொண்டு வரவேண்டும், யாராவது கேள்வி கேட்டால் இந்த இடத்தில இயேசு கற்பித்த படியே அவர் சீஷர்கள் உரைத்து அந்த குட்டியை அவிழ்த்து போல் நாமும் அதுபோலவே செய்து நாம் அவர்களை கட்டவிழ்த்து ஆண்டவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 

பின்னர் அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.உங்களுடைய நீதியின் வஸ்திரத்தை நீங்கள் வழி நடத்தி வருபவர் மேல் போட வேண்டும் அவ்வாறு போட்ட மாத்திரத்தில் இயேசு அதின் மேல் ஏறி உட்காருவார். மூன்று விதமான காரியங்களை இங்கு நாம் காணலாம். இயேசு வந்ததின் நோக்கம் கட்டவிழ்க்க பட வேண்டிய கழுத்தை குட்டிகள் அநேக இடங்களில் கட்டப்பட்டு இருக்கிறது, அதை கட்டவிழ்க்கும் அதிகாரத்தை இயேசு உங்களுக்கு கொடுத்து இருக்கிறார். 

உங்களுக்கு கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்தி உங்கள் ஆடுகளை கர்த்தரிடத்தில் கூட்டிக்கொண்டு வரவேண்டும். நீங்கள் சொல்கிற விசுவாசத்தின் அறிக்கை, நீங்கள் சொல்கிற விசுவாசத்தின் சாட்சிகள், நீங்கள் சொல்லுகிற விசுவாசத்தின் இரட்சிப்பு, நீங்கள் சொல்லுகிற விசுவாசத்தின் வசனங்கள் அவர்களுக்கு போதிக்க பட்டிருக்க வேண்டும். நீங்கள் போதிக்கின்ற வசனம் தான் நீங்கள் அவர்கள் மேல் போடுகின்ற வஸ்திரம். 

1. ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்

மாற்கு 11:9
முன்நடப்பாரும், பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்,

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கழுத்தை குட்டியின் மேல் அமர்ந்து எருசலேம் வீதிகளில் பவனி வருகிறார். அங்கு சூழ்ந்திருந்த ஜனங்கள் சொன்ன காரியம் என்னவென்றால் ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், ஆம் அன்று கொல்கதா மலையிலே நமக்காக இரத்த சாட்சியாய் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த மாத்திரத்தில் நம் பாவங்கள், அக்கிரமங்கள், நோய்கள், சாபங்கள், எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்து ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஸ்தோத்ரிராம் உண்டாவதாக


2. ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்

யோவான் 12:13
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.

ஆண்டவர் நமக்கு இராஜாவாய் இருக்கிறார். அவர் இஸ்ரவேலுக்கு மாத்திரம் ராஜா அல்ல அவர் புற ஜாதியாகிய நமக்கும் ராஜாவாக இருக்கிறார். எனவே தான் அங்கு கூடியிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் தீர்க்கதரிசனமாக சொன்னார்கள் கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் இஸ்ரவேலின் ராஜா என்று அந்த ராஜாவை தான் உங்கள் ராஜாவாக ஏற்று கொண்டு இருக்கிறீர்கள். 

அவருடைய தொடையில் எழுதப்பட்டிருக்கிறது அவர் ராஜாதி ராஜா என்று, அவருடைய கிரீடத்தில் எழுதப்பட்டிருக்கிறது அவர் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்று அவர் ஒருவரும் சேரக்கூடாது ஒளியிலும், அவர் சாவாமை உள்ளவரும், மனுஷர் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாத ஒளியில் வாசம் செய்கிறவரும் அவர் இஸ்ரவேலின் தேவன். அதனால் தான் அந்த ஜனங்கள் தீர்க்கதரிசனமாக சொன்னார்கள் கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் இஸ்ரவேலின் ராஜா. 

3. ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக

மாற்கு 11:10
கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். 

ராஜ்ஜியம் ஆசிர்வதிக்க படவேண்டும் என்றால் இயேசு வர வேண்டும். நீங்கள் ஆசிர்வதிக்கப்படவேண்டும் என்றால் இயேசு வரவேண்டும். அங்கு இருந்த எருசலேம் மக்கள் தீர்க்கதரிசிகள். எனவே தான் அவர்கள் உரைத்தார்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஸ்தோத்தரிக்கப்பட்டவர், அவர் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர். ராஜ்ஜியம் ஆசிர்வதிக்கப்படுவதற்காக கர்த்தராகிய தேவன் நாமத்தில் பிதாவாகிய ரூபத்தை கொண்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனித அவதாரம் எடுத்து எருசலேம் வீதியில் அவர் வந்தார். அவர் நம் தேவன் சதாகாலமும் நம்மோடு கூட இருப்பவர், முடிவு பரியந்தம் நம்மை நடத்துவார். ஆமென். 

No comments:

Post a Comment