Wednesday, November 1, 2017

உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்


கன்மலை கிறிஸ்துவ சபை 2017 நவம்பர் மாத வாக்குத்தத்தம்

1.11.2017

Brother: Micheal 

" உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் "

மீகா 7:15
நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.

மீகா 7:14
கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்ததுபோலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக.

மீகா 7:15
நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.

மீகா 7:16
புறஜாதிகள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாய்ப் போகும்.

மீகா 7:17
பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள்.

உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். இந்த நவம்பர் மாதம் முழுவதும் ஒவ்வொரு விதமாக உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் உன் எல்லா தேவைகளையும் இந்த மாதத்தில் சந்திப்பார். 

அதிசயம் காணப்பண்ணும் பொழுது பராக்கிரமசாலிகள் வெட்கப்பட்டு போவார்கள். அவர்கள் கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாய்ப் போகும், மண்ணை நக்குவார்கள்;உனக்கு பயந்து நடுநடுங்கிப் போவார்கள். இந்த மாதத்தில் இவ்வளவும் நடக்கும். அதிசயங்களை காண செய்கிறவர் உன்னோடு கூட இருக்கிறார். 

நியாயாதிபதிகள் 13:13
கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,

நியாயாதிபதிகள் 13:14
திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார்.

நியாயாதிபதிகள் 13:15
அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைத்துக்கொண்டுவருமட்டும் தரித்திரும் என்றான்.

நியாயாதிபதிகள் 13:16
கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.

நியாயாதிபதிகள் 13:17
அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.

நியாயாதிபதிகள் 13:18
அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்; என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.

நியாயாதிபதிகள் 13:19
மனோவா போய், வெள்ளாட்டுக் குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது.

நியாயாதிபதிகள் 13:20
அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.

அவர்கள் தகன பலியிட்டு பார்த்து கொண்டு இருக்கிற வேளையிலே ஒரு அதிசயம் விளங்கினது. நீங்கள் இந்த மாதம் பார்த்து கொண்டு இருக்கும் வேளையிலே ஒரு அதிசயம் அவர் அதிசயம் செய்வார். அவருடைய நாமம் அதிசயம். 

அவர் எப்படியெல்லாம் அதிசயம் காணச்செய்வார் ?

1. எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உனக்கு செய்வார் 

யாத்திராகமம் 34:10
அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.

எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை கர்த்தர் இந்த மாதத்திலே உங்களுக்கு செய்வார். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கர்த்தருடைய செய்கைகளை நீங்கள் காணப்பீர்கள். உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.

2. வியாதியை நீக்கி அதிசயமான காரியங்களை செய்வார் 

லூக்கா 5:17
பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.

லூக்கா 5:18
அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளேகொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள்.

லூக்கா 5:19
ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள்.

லூக்கா 5:20
அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

லூக்கா 5:21
அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.

லூக்கா 5:22
இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன?

லூக்கா 5:23
உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?

லூக்கா 5:24
பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 5:25
உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.

லூக்கா 5:26
அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.

சங்கீதம் 136:4
ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

3. பஞ்ச காலத்திலும் எண்ணி முடியாத அதிசயங்களை அவர் செய்வார். 

யோபு 5:9
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.

II இராஜாக்கள் 4:1
தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக் கொள்ள வந்தான் என்றான்.
II இராஜாக்கள் 4:2
எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்னசெய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்.

II இராஜாக்கள் 4:3
அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அயல்வீட்டுகாரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி,

II இராஜாக்கள் 4:4
உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.

II இராஜாக்கள் 4:5
அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள்.

II இராஜாக்கள் 4:6
அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று.

பஞ்ச காலத்திலும் கர்த்தர் உன்னை திருப்தி ஆக்குவார். சிங்க குட்டிகள் தாழ்ச்சி அடைந்து பட்டினியாய் இருக்கும் ஆனால் கர்த்தரை நம்புகிறவர்களுக்கு ஒரு நன்மையையும் குறைவு படாது. இந்த மாதம் உங்களை செழிப்பாய் நடத்தி உங்களை அதிசயங்களை காணச்செய்வார். 




FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment