Tuesday, December 19, 2017

அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்


கன்மலை கிறிஸ்துவ சபை

Message: Brother Micheal

Date: 17.12.2017

சங்கீதம் 37:19
அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.

பஞ்சகாலத்திலே அவர்கள் திருப்தியடைவார்கள். நம்முடைய பரிசுத்த வேதத்தில் இருந்து மூன்று பேரை நாம் பார்க்க போகிறோம். முதலாவதாக நாம் ஈசாக்கை குறித்து பார்க்கப்போகிறோம். ஈசாக்கு பஞ்சகாலத்தில் தேசத்திற்கு ஆசிர்வாதமாய் இருக்கிறார். இரண்டாவதாக யோசேப்பை குறித்து பார்க்கப்போகிறோம். யோசேப்பு பஞ்சகாலத்தில் தன் குடும்பத்திற்கு ஆசிர்வாதமாய் இருக்கிறார். இறுதியாக நகோமி தன் சந்ததிக்கு ஆசீர்வாதமாக விளங்குகிறார். இந்த மூன்றுமே பஞ்சகாலத்தில் நடந்த சம்பவங்கள்.

1. உன்னை கொண்டு உன் தேசத்தை ஆசீர்வதிப்பார் 

ஆதியாகமம் 26:1
ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.

ஆதியாகமம் 26:12
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;

ஆதியாகமம் 26:13
அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.

ஆதியாகமம் 26:14
அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு,

ஈசாக்கு அந்த தேசத்தில் விதை விதைத்து நூறு மடங்கு அறுவடை செய்தான். அதினால் அவன் பலன் அடைந்தான். அதினால் அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். எனவே பெலிஸ்தர்கள் ஈசாக்கு பேரில் பொறாமை கொண்டார்கள்.

ஆதியாகமம் 26:15
அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.

ஆதியாகமம் 26:16
அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.

ஆதியாகமம் 26:17
அப்பொழுது ஈசாக்கு அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து,

ஆதியாகமம் 26:18
தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.

ஆதியாகமம் 26:19
ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள்.

ஆதியாகமம் 26:20
கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம்பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான்.

ஆதியாகமம் 26:21
வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான்.

ஆதியாகமம் 26:22
பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.

ஈசாக்கு எந்த தேசத்தில் சென்றாலும் அங்கெல்லாம் செழிப்பு. அவர் எங்கெல்லாம் இடம் பெயர்ந்து போனாலும் கர்த்தர் அவரை ஆசிர்வதித்து கொண்டே இருந்தார். நம்மோடு கர்த்தர் இருந்தால் நம் தேசத்தில் செழிப்பு உண்டாகும். நம்மை கொண்டு கர்த்தர் தேசத்தில் ஒரு ஆசிர்வாதத்தை உண்டாக்குவார். உன்னையும் உன் குடும்பத்தையும் ஆசிர்வாதமான ஜனமாய் மாற்றி கர்த்தர் ஆசீர்வதிப்பார். சத்ருக்கள் எவ்வளவுதான் உன் ஆசிர்வாதத்தை திருடினாலும், கர்த்தர் உன் கையை ஈசாக்கை ஆசிர்வதித்தது போல் உன்னை ஆசிர்வத்திது உன்னை பெருகப்பண்ணுவார். 

2. உன்னை கொண்டு உன் குடும்பத்தை ஆசீர்வதிப்பார் 

ஆதியாகமம் 41:54
யோசேப்பு சொல்லியபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது; சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது.

ஆதியாகமம் 41:55
எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, ஜனங்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி: ஓலமிட்டார்கள்; அதற்குப் பார்வோன்: நீங்கள் யோசேப்பினிடத்துக்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று எகிப்தியர் எல்லாருக்கும் சொன்னான்.

ஆதியாகமம் 41:56
தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்து தேசத்தில் வரவரக் கொடிதாயிற்று.

ஆதியாகமம் 41:57
சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.

தேசமெங்கும் கொடிய பஞ்சமாய் இருந்ததாலே யாக்கோபு தன் பிள்ளைகளிடத்தில் நாம் உயிர் வாழவதற்கு எகிப்த்திலே தானியம் இருப்பதாக கேள்விப்பட்டேன். எகிப்திற்கு சென்று தானியம் பெற்று வாருங்கள் என்று தன் பிள்ளைகளுக்கு சொன்னார். அவர்கள் பேரும் யோசேப்பிடம் சென்று தலை வணங்கி ஆண்டவரே உமது கண்களில் எனக்கு தயவு கிடைக்குமானால் எங்களுக்கு தானியத்தை நீர் வார்த்து தருவீராக என்று வேண்டி கொண்டார்கள். 

ஆதியாகமம் 45:4
அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.

ஆதியாகமம் 45:5
என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.

ஆதியாகமம் 45:7
பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.

ஆதியாகமம் 45:8
ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்.


ஆண்டவர் அப்படியாய் பஞ்சகாலத்திலே யோசேப்பை உயர்த்தினார். என்ன தான் சாத்தான் உன்னை விழத்தள்ளினாலும் கர்த்தர் சொல்லுகிறார். பஞ்சகாலத்தில் உன் குடும்பத்தை போஷிப்பதற்கு உன்னை கொண்டு பெரிய காரியங்களை செய்வார். 

3. உன்னை கொண்டு உன் சந்ததியை ஆசீர்வதிப்பார் 

ரூத் 1:1
நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.

பிறகு ரூத் தன் மாமியாராகிய  நகோமியோடே பெத்லகேமிலே குடிபெயர்கிறாள். இவர்கள் மிகவும் ஏழைகளாய் இருக்கிறார்கள். நகோமியோ வயதான ஸ்திரி என்பதால் ரூத் தன் மாமியாருக்காக வயல்களில் கதிர்களை பொருக்கி கொண்டு வருவதற்காக ஆயத்தமாகிறாள்.

 இங்கே ரூத் தன் மாமியார் நகோமிக்காக எதாவது வயல் வெளியில் சிந்திய கதிர்களை சேகரிக்க செல்கிறாள். அப்பொழுது ரூத்திற்கு போவாஸின் கண்களில் தயவு கிடைத்து கதிர் பொறுக்குகிறார்.பின்னாளில் ரூத் போவாசையே மணந்து கொள்கிறாள் அதன் மூலமாக வந்த சந்ததி தான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இது தான் சந்ததியின் ஆசிர்வாதம் அங்கே யோசேப்பை குடும்பத்துக்கு ஆசீர்வாதமாக வைத்தார். முதலில் நாம் பார்த்தது ஈசாக்கை தேசத்திற்கு ஆசிர்வாதமாய் வைத்தார். ஈசாக்கு எங்கு சென்றாலும் கர்த்தர் அவருக்கு ஆசிர்வாதம் கட்டளையிட்டார். இறுதியாக உன்னை கொண்டு உன் சந்ததியை கர்த்தர் ஆசிர்வதித்து உன்னை பெறுக செய்வார் ஆமென். 


FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment